முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எந்த நாட்டினரும் அறிவுரை கூற வேண்டாம்: ராஜபக்சே

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2012      உலகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச்.30 - இலங்கையில் நிரந்தர அமைதியை கொண்டு வருவது தொடர்பாக எந்த நாட்டினரும் எங்களுக்கு அறிவுரை கூற வேண்டாம் என்று இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே தெரிவித்துள்ளார். கொழும்புவில் கண்காட்சியை தொடங்கி வைத்த அவர், இலங்கையில் மிகப் பெரிய தியாகத்துக்குப் பிறகுதான் அமைதி திரும்பியுள்ளது. நாட்டில் அமைதியை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதை எவ்விதம் நிறைவேற்றுவது என்பது நமக்கே தெரியும். இந்நிலையில் எதை செய்ய வேண்டும் என்று மற்றவர்கள் அறிவுரை கூற தேவையில்லை. 

கடந்த வாரம் ஜெனிவாவில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைகள் கவுன்சில் சில பரிந்துரைகளை அளித்திருந்தது. இது குறித்து நேரடியாக கருத்து தெரிவிக்காமல் தங்கள் நாட்டுக்கு எதிராக சர்வதேச அளவில் இப்பிரச்சினை கொண்டு வரப்பட்டு அதில் வெற்றியும் பெறப்பட்ட அதிருப்தியில் ராஜபக்சே இக்கருத்தை வெளியிட்டுள்ளார். அரசியல் காரணங்களுக்காக மாறுபட்ட நிலையை எடுத்துள்ள சர்வதேச சமூகத்தினர் கூட உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வந்த தம்மை பாராட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்