முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லண்டனில் யுவராஜ் சிங்கை சந்தித்தார் டெண்டுல்கர்

சனிக்கிழமை, 31 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

லண்டன், மார்ச். 31 - லண்டனில் சிகிட்சை பெற்ற யுவராஜ் சிங்கை சந்தித்த நட்சத்திர வீரர் டெண்டுல்கர் அவரை கட்டித் தழுவி விரைவி ல் குணம் பெற வாழ்த்து தெரிவித்தார்.  யுவராஜ் சிங் மற்றும் டெண்டுல்கருக்கு இடையேயான இந்த சந்திப்பு லண்ட னில் உள்ள யுவராஜ் சிங்கின் நண்பர் இல்லத்தில் நடைபெற்றது. அவர் தற் போது நன்கு தேறி வருகிறார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர்களில் ஒருவர் யுவராஜ் சிங். இவர் கடந்த சில மாதங்களாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் புற்று நோய்க்காக சிகிட்சை எடுத்து வந்தார். 

யுவராஜ் சிங்கிற்கு லண்டன் மருத்துவ மனையில் நுரையீரல் புற்று நோய்க்கா க கீமோதெரபி எனும் சிறப்பு சிகிட்சை அளிக்கப்பட்டது. இதுவரை அவருக்கு 3 கட்ட சிகிட்சை முடிவடைந்து விட்டது. 

இந்திய அணியின் நட்சத்திர வீரரான சச் சின் டெண்டுல்கர் கடந்த சில மாதங்க ளாக கால் பாதத்தில் ஏற்பட்டுள்ள கா யத்துடன் போட்டிகளில் ஆடி வந்தார். 

அவரது கால் காயம் மிகுந்த தொந்தரவு அளித்து வந்ததால் அவர் லண்டனில் டாக்டர்களிடம் ஆலோசனை பெறுவத ற்காக சென்று இருக்கிறார். இது முடிந் ததும் அவர் ஐ.பி.எல். - 5 போட்டியில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்க ப்படுகிறது. 

இங்கிலாந்தின் தலைநகரான லண்டன் சென்ற டெண்டுல்கர் அங்கு மருத்துவ மனையில் சிகிட்சை பெற்று வரும் பஞ் சாப் வீரர் யுவராஜ் சிங்கை சந்தித்தார். 

இருவருக்குமிடையேயான இந்த சந்தி ப்பு சுமார் 1 மணி நேரம் நடந்தது. பின்பு இருவரும் போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். இறுதியில் டெ ண்டுல்கர், யுவராஜ் விரைவில் குணம் பெற வாழ்த்து தெரிவித்தார். 

முன்னதாக டெண்டுல்கர், யுவராஜ் சிங்கை கட்டித் தழுவி தனது ஆறுதலை தெரிவித்தார். யுவராஜ் சிங் இளமை காலத்தில் டெண்டுல்கரை ரோல் மாட லாக கொண்டு கிரிக்கெட் ஆடியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம் இந்திய அணியின் முன் னாள் கேப்டனும், சுழற் பந்து வீச்சாள ருமான அனில் கும்ளே, யுவராஜ் சிங் கை சந்தித்து தனது வாழ்த்தை தெரிவி த்தது நினைவு கூறத்தக்கது. அவரைத் தொடர்ந்து தற்போது டெண்டுல்கர் யுவி யை சந்தித்து இருக்கிறார். 

அதிரடி வீரரான யுவராஜ் சிங் 2011 -ம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை கிரிக் கெட் போட்டியில் ஆட்டநாயகன் விரு தினைப் பெற்றவர். போட்டிக்கு முன் னதாக உலகக் கோப்பையை வென்று சச்சினுக்கு அர்ப்பணிப்பேன் என்று கூறியிருந்தார். 

யுவராஜ் சிங் லண்டனில் உள்ள இன்டி யனாபொலிஸ் மருத்துவனையில் இருந்து இந்த மாதம் 18 -ம் தேதி சிகிட்சை முடிவடைந்த நிலையில் விடுவிக்கப்ப ட்டார். தற்போது மறுவாழ்வு சிகிட்சையை எடுத்து வருகிறார்.  

யுவராஜ் சிங்கிற்கு கடந்த பிப்ரவரி மா தம் முதல் அமெரிக்க மருத்துவமனையி ல் சிகிட்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர் மே மாதம் முதல் வாரம் விளை யாட்டிற்கு திரும்புவார் என்று கூறப்ப டுகிறது. 

இந்த சிகிட்சையின் போது, 30 வய தான யுவராஜ் சிங்கிற்கு மொட்டை அடி க்கப்பட்டு இருந்தது. இந்தப் பிரச்சினை காரணமாக யுவராஜ் சிங் கடந்த நவம் பர் மாதம் முதல் போட்டிகளில் ஆடவி ல்லை. இதில் உள்நாட்டில் நடந்த 2 தொடர்களும் அடங்கும். 

கடந்த 2000 -ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான யுவ ராஜ் சிங் இதுவரை 274 ஒரு நாள் போட்டிகளில் ஆடி மொத்தம் 8,051 ரன்னைக் குவித்து இருக்கிறார். தவிர, 37 டெஸ் டில் ஆடி மொத்தம் 1,775 ரன்னை எடு த்து இருக்கிறார். 

கடந்த வருடம் நடந்த உலகக் கோப் பை போட்டியில் யுவராஜ்சிங் 9 போட்டிகளில் பங்கேற்று மொத்தம் 362 ரன் னையும், 15 விக்கெட்டையும் கைப்பற் றினார். இறுதியில் தொடர் நாயகன் விருதினையும் தட்டிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்