முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சர்வதேச கிரிக்கெட்: ஹெராத் சுழற்பந்தில் இலங்கை வெற்றி

சனிக்கிழமை, 31 மார்ச் 2012      விளையாட்டு
Image Unavailable

 

காலே, மார்ச். 31 - இங்கிலாந்து அணிக்கு எதிராக காலே நகரில் நடைபெற்ற முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 75 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடரில் 1 - 0 என்ற கணக்கில் முன்னிலை பெற் று உள்ளது.  இந்தப் போட்டியில் இலங்கை அணி தரப்பில், கேப்டன் ஜெயவர்த்தனே, அபாரமாக பேட்டிங் செய்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். அவருக் கு பக்கபலமாக, பிரசன்னா, சண்டிமா ல், சமரவீரா ஆகியோர் ஆடினர். 

பெளலிங்கின் போது, இந்தப் போட்டி யில் சுழற் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி முக்கிய விக்கெட்டைக் கைப் பற்றினர். ஹெராத், ரன்டிவ் நன்கு பந்து வீசி அணிக்கு வெற்றி தேடித் தந்தனர். 

இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்ட்ராஸ் தலைமையில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து அந்த அணிக்கு எதிராக விளையாடி வருகிறது. 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிக ளுக்கு இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்த திட்டமிடப் பட்டது. இதன் முதல் டெஸ்ட் போட்டி காலே சர்வதேச அரங்கத்தில் கடந்த 26 -ம் தேதி 29 -ம் தேதி முடிந்தது. 

முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 96.3 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 318 ரன் னை எடுத்தது. கேப்டன் ஜெயவர்த்த னே சதம் அடித்தது ஆட்டத்தின் சிறப்ப ம்சமாகும். 

கேப்டன் பொறுப்புடன் ஆடி, 315 பந்தி ல் 180 ரன்னை எடுத்தார். இதில் 22 பவு ண்டரி மற்றும் 3 சிக்சர் அடக்கம். தவிர, சண்டிமால் 27 ரன்னையும், பிரசன்னா 23 ரன்னையும், சமரவீரா 20 ரன்னையும் எடுத்தனர். 

பின்பு முதல் இன்னிங்சை ஆடிய இங்கி லாந்து அணி 46.4 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 193 ரன்னில் சுருண்டது. இயான் பெல் 52 ரன்னையு ம், ஸ்ட்ராஸ் 26 ரன்னையும், பிராட் 28 ரன்னையும், ஸ்வான் 24 ரன்னையும், ஆண்டர்சன் 23 ரன்னையும் எடுத்தனர். 

இதனைத் தொடர்ந்து களம் இறங்கிய இலங்கை அணி 2 - வது இன்னிங்சில் 84.3 ஓவரில் 214 ரன்னை எடுத்தது. பிரச ன்னா 61 ரன்னையும், சமரவீரா 36 ரன் னையும், சண்டிமால் 31 ரன்னையும், எடுத்தனர். 

இங்கிலாந்து அணி 2 -வது இன்னிங்சில் 340 ரன்னை எடுத்தால் வெற்றி பெற லாம் என்ற இலக்கை இலங்கை அணி வைத்தது. ஆனால் அடுத்து களம் இறங் கிய அந்த அணி 99 ஓவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 264 ரன்னை எடுத்தது. 

இதனால் இலங்கை அணி இந்த முதல் டெஸ்டில் 75 ரன் வித்தியாசத்தில் வெற் றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிக ள் கொண்ட இந்தத் தொடரில் 1- 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்று உள்ளது. 

இங்கிலாந்து அணி சார்பில், டிராட் 266 பந்தில் 112 ரன்னை எடுத்தார். கீப்பர் பிரையர் 41 ரன்னையும், பீட்டர்சன் 30 ரன்னையும், கேப்டன் ஸ்ட்ராஸ் 27 ரன் னையும், எடுத்தனர். 

இலங்கை அணி தரப்பில், ஹெராத் 97 ரன்னைக் கொடுத்து 6 விக்கெட் எடுத் தார். முதல் இன்னிங்சிலும் அவர் 6 விக் கெட் எடுத்தார். ரன்டிவ் 4 விக்கெட் எடுத்தார். முதல் இன்னிங்சில் 2 விக்கெ ட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஹெராத் தேர்வு செய்யப் பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்