முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல்

வெள்ளிக்கிழமை, 25 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

போடி,மார்ச்.25 - போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியின் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி ஜெயக்கொடியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு மாற்று வேட்பாளராக தேனி எம்.எல்.ஏ கணேசன் வேட்புமனுதாக்கல் செய்தார்.இவர்களுக்கு போடி தொகுதி செயலாளர் போதுமணி,நகர செயலாளர் பாலமுருகன்,ஒன்றிய செயலாளர் சற்குணம் ,ஆகியோர் முன் மொழிந்தனர்.உடன் தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் சேகர் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் இருந்தனர்.வேட்புமனு தாக்கல் செய்தவர் தனது சொத்து கணக்கு குறித்த விபரத்தையும் அளித்தார்.வேட்புமனு தாக்கல் செய்ய சென்ற வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை  அதிமுக ,தேமுதிக,இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,புதியதமிழகம்,உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் , தொண்டர்கள் என ஏராளமானோர்   வழி அனுப்பி வைத்தனர். 

அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்த பின் நிருபர்களிடம் கூறியதாவது:

அதிமுக ,தேமுதிக,இந்தியகம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ,புதிய தமிழகம்,மற்றும் கூட்டணியை சார்ந்த கட்சி வேட்பாளர்கள் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர்.இவர்கள் அனைவரும் அதிக வாக்கு வித்தியாசத்தில் அமோகமாக வெற்றி பெறுவார்கள் என்பதில் எந்த வித அய்யமும் இல்லை.போடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி ஆதரவுடன் குறைந்த பட்சம் 50,000 வாக்குகள் வித்தியாசத்தில்வெற்றி பெறுவேன் என்று நம்பிக்கையுடன் கூறினார். கடந்த 5 ஆண்டுகாலத்தில்  மைனாரிட்டி திமுக ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாக செயல்பட்டு வந்தது.மேலும் மக்கள் வேறு வழியின்றி துர்பாக்கியமான சூழ்நிலையில் வாழ்ந்து வந்தவர்களுக்கு கழக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் நல்லாசியுடன் விரைவில் விடுதலை கிடைக்க போகும் நாள் நெருங்கிவிட்டது. மின்சார தட்டுப்பாடு,விலைவாசி உயர்வு ,சட்ட ஒழுங்கு பிரச்சனை ,சிறுவர்,சிறுமியர் கடத்தல் மற்றும் பாலியல் தொந்தரவுகள் குறித்த குற்ற செயல்கள் ஆளும் கட்சியான மைனாரிட்டி திமுக ஆதரவுடன் செயல்பட்டு வந்தது.மேலும் ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் ராசா வை கைது செய்தது போல் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தாரையும்  கைது செய்து விசாரணை நடத்தினால் மேலும் பல உண்மைகள் தெரியவரும் என்று கூறினார்.மேலும் போடி சட்டமன்ற தொகுதியில் திமுக ஆட்சியில் நிறைவேற்றாத திட்டங்களை அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்படும் என்று உறுதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்