முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.கே. சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப பிரஜேஸ் மிஸ்ரா வலியுறுத்தல்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 2 - ராணுவ தலைமை தளபதி வி.கே. சிங்கை கட்டாய விடுப்பில் அனுப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மிஸ்ரா வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியுள்ளதாவது,  ராணுவ தளபதிக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காததற்கு பாதுகாப்பு துறை அமைச்சரும் ராணுவ தளபதியுமே பொறுப்பு. இத்தகைய ராணுவ தளபதியை நீக்கினால் விளைவுகள் ஏதாவது ஏற்பட கூடும். இதனால் அவரை கட்டாய விடுப்பில் அனுப்ப வேண்டும். அவர் ஓய்வு பெற இன்னும் 2 மாதங்களே உள்ளன. எனவே அதுவரை அரசாங்க ஊதியத்தில் அவரை விடுப்பில் அனுப்புவதே சாலச்சிறந்ததாகும். மற்ற விவகாரங்களை பாதுகாப்பு அமைச்சகமே பார்த்துக் கொள்ளும் என்றார் அவர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்