முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு சி.பி.ஐ. கட்டுப்பாடு

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி. ஏப்.- 2 - இந்திய ராணுவத்திற்கு டாட்ரா டிரக்குகளை கொள்முதல் செய்ததில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரமை நடத்தி வரும் சி.பி.ஐ. நேற்று லண்டனிைல் உள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர் ரவி ரிஷி என்பவருக்கு கட்டுப்பாட்டு உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய ராணுவத்திற்கு டாட்ரா நிறுவனத்தின் 600 டிரக்குகளை கொள் முதல் செய்ய தனக்கு ரூ. 14 கோடி லஞ்சம் கொடுக்க  சிலர் முன் வந்ததாக ராணுவ  தலைமை தளபதி வி.கே. சிங் சமீபத்தில் புகார் கூறியிருந்தார். இது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. டாட்ரா நிறுவனத்தின் தரம் குறைந்த 600 டிரக்குகளை ராணுவம் கொள்முதல் செய்ய தனக்கு லஞ்சம் கொடுக்க லெப்டினன்ட் ஜெனரல் தேஜிந்தர் சிங் முன்வந்தார் என்றும் வி.கே. சிங் கூறியுள்ளார். ஆனால்  தன் மீதான குற்றச்சாட்டுக்களை தேஜிந்தர் சிங் மறுத்துள்ளார். மேலும் வி.கே.சிங்கிற்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றையும் தேஜிந்தர் சிங் தொடர்ந்துள்ளார்.

டாட்ரா டிரக்குகள் கொள்முதல் விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் ஒரு வழக்கு பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே  இந்திய ராணுவத்திற்கு டாட்ரா டிரக்குளை வாங்கியதில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்தும் சி.பி. ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  டாட்ரா கம்பெனியை  சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் ரவி ரிஷி என்பவர் மீது சி.பி. ஐ. அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.  ரவி ரிஷியிடம் ஏற்கனவே  இரு முறை சி.பி.ஐ.அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். மீண்டும் அவரிடம் விசாரணை நடத்த சி.பி. ஐ. அதிகாரிகள் முயற்சி நேற்கொண்டுள்ளனர். ஆனால் அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்து தகவல் தெரிவிக்க டாட்ரா கம்பெனி ஊழியர்கள் மறுத்து விட்டனர்.

தன் மீது கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என்றும்  துரதிருஷ்டமானவை என்றும் தனது கம்பெனியின் டாட்ரா டிருக்குள் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் மூலமாகத்தான் இநதிய ராணுவத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன என்றும் ரவி ரிஷி கூறியுள்ளார்.

இந்த நிலையில் ரவி ரிஷி வெளிநாட்டிற்கு தப்பி ஓடி விடாமல் இருக்க சி.பி. ஐ. அதிகாரிகள் கட்டுப்பாடு உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்கள் மற்றும் எல்லை கட்டுப்பாட்டு அறைகளுக்கு  இது தொடர்பாக சி.பி. ஐ. அதிகாரிகள் உஷார்படுத்தியுள்ளனர்.

ரவி ரிஷி தப்ப முயன்றால் அது குறித்த தகவலை உடனே  தங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றும்  சி.பி.ஐ. அதிகாரிகள்  விமான நிலையங்களின் அதிகாரிகளை கேட்டுக்கொண்டுள்ளனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்