முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோடியின் அரசாங்க கணக்கு சரியில்லை! கணக்கு தணிக்கை அறிக்கை

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

அமதாபாத், ஏப். - 2 - முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,  விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்திகரமாக இல்லை. தன்னாட்சி பெற்ற நிறுவனங்களில் 22 நிறுவனங்களின் கணக்குகளை தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்கு கடந்த 4 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படவே இல்லை. அரசு பட்ஜெட்டில் ரூ. 1,444 கோடி சேமிப்பு இருக்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ. 2,045 கோடி செலவிடாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.  இதை அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது. விளையாட்டு கொள்கை சரியாக வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாக பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை. குடிநீர் கொள்கையும் சரியில்லை. தேசிய நதிநீர் பாதுகாப்பு திட்டம் எந்த ஆய்வும் இல்லாமல் அமலாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு செய்யப்படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைபடுத்தும் திட்டத்தை முறையாக கண்காணிக்கவில்லை என்று தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago