முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காங்கிரஸ் மூத்த தலைவர் என்.கே.பி.சால்வே மரணம்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி,ஏப்.- 2 - காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான என்.கே.பி.சால்வே நேற்றுக்காலையில் மரணமடைந்தார். அவருக்கு வயது 90 இந்திய கிரிக்கெட் ஆணைய தலைவராகவும் பதவி வகித்தவர். சால்வேவுக்கு வயதாகிவிட்டதால் கடந்த சுகவீனம் அடைந்தார். உடனே டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்றுக்காலையில் அவர் மரணமடைந்தார். அவரது மனைவி ஏற்கனவே மரணமடைந்துவிட்டார். சால்வேவுக்கு ஒரு மகன் இருக்கிறார். அவர் பெயர் ஹரீஷ் சால்வே. அவர் பிரபல வழக்கறிஞர். அருந்ததி என்ற மகளும் உள்ளார். மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள சிஹின்வாதாவில் பிறந்தவர். மத்திய அமைச்சரவையில் பல இலாகாக்களை வகித்தவர் சால்வே என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்