முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2 -வது டி - 20 : மே.இ.தீவு 14 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

பிரிட்ஜ்டவுன், ஏப். - 2 - ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பிரிட்ஜ் டவுன் நகரில் நடைபெற்ற 2-வது 20 -க்கு 20 போட்டியில் மே.இ.தீவு அணி 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தத் தொடர் 1- 1 என்ற கணக்கில் சமனாகியது.  இந்தப் போட்டியில் மே.இ.தீவு அணி தரப்பில், துவக்க வீரர் ஸ்மித் அதிரடி யாக ஆடி அரை சதம் அடித்து அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார். சார்லஸ் மற்றும் டி. பிராவோ ஆகியோர் அவரு க்குப் பக்கபலமாக ஆடினர்.  பின்பு பெளலிங்கின் போது, எட்வர்ட்ஸ் மற்றும் சாமுவேல்ஸ் இருவரும் நன் கு பந்து வீசி முக்கிய விக்கெட்டுகளை க் கைப்பற்றினர். டி. பிராவோ அவர்க ளுக்கு ஆதரவாக பந்து வீசினார்.  கேப்டன் சம்மி தலைமையிலான ஆஸ் திரேலிய அணிக்கும், கேப்டன் பெய்லி தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கும் இடையேயான 2 -வது டி - 20 போட்டி பிரிட்ஜ்டவுன் நகரில் பகலிர வு ஆட்டமாக நடந்தது. 

முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய மே.இ.தீவு அணி 19.4 ஓவரில் அனைத் து விக்கெட்டையும் இழந்து 160 ரன் னை எடுத்தது. இதில் ஒரு வீரர் அரை சதமும், ஒரு வீரர் கால் சதமும் அடித் தனர்.  துவக்க வீரரான ஸ்மித் அதிரடியாக ஆடி 34 பந்தில் 63 ரன்னை எடுத்தது ஆட்டத்தின் சிறப்பம்சமாகும். இதில் 6 பவுண்டரி மற்றும் 4 சிக்சர் அடக்கம். 

இறுதியில் அவர் டொகெர்டி வீசிய பந் தில் டி.ஹஸ்சேவிடம் கேட்ச் கொடுத் து வெளியேறினார். தவிர, சார்லஸ் 21 பந்தில் 37 ரன்னை எடுத்தார். டி. பிரா வோ 23 ரன் எடுத்தார். 

ஆஸ்திரேலிய அணி தரப்பில், முன்ன ணி வேகப் பந்து வீச்சாளரான பிரட்லீ 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். தவிர, வாட்சன் மற்றும் மெக்கே தலா 2 விக்கெட்டும், டொகெர்டி 1 விக்கெட்டும் எடுத்தனர். 

ஆஸ்திரேலிய அணி 161 ரன்னை எடுத் தால் வெற்றி பெறலாம் என்ற இலக் கை மே.இ.தீவு அணி வைத்தது. ஆனா ல் அடுத்து களம் இறங்கிய அந்த அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்னை எடுத்தது. 

இதனால் இந்த 2 -வது டி - 20 போட்டி யில் மே.இ.தீவு அணி 14 ரன் வித்தியா சத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட இந்தத் தொட ர் 1 - 1 என்ற கணக்கில் டிராவானது. 

ஆஸ்திரேலிய அணி சார்பில், வார்னர் 43 பந்தில் 58 ரன்னையும், கேப்டன் பெய்லி 24 ரன்னையும், மைக் ஹஸ்சே 14 ரன்னையும், டி. ஹஸ்சே 19 ரன்னையு ம், கீப்பர் வாடே 17 ரன்னையும் எடுத் தனர். 

மே.இ.தீவு அணி தரப்பில், எட்வர்ட்ஸ் 23 ரன்னைக் கொடுத்து 3 விக்கெட் எடு த்தார். சாமுவேல்ஸ் 23 ரன்னைக் கொ டுத்து 3 விக்கெட் எடுத்தார். தவிர, டி. பிராவோ 2 விக்கெட் எடுத்தார். இந்தப் போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்மித் தும், தொடர் நாயகனாக வாட்சனும் தேர்வு செய்யப்பட்டனர். 

--------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago