முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ் போட்டி லியாண்டர் - ஸ்டீபனெக் ஜோடி இரட்டையர் பிரிவில் சாம்பியன்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

மியாமி, ஏப். - 2 -  அமெரிக்காவில் மியாமியில் நடைபெ ற்ற சோனி எரிக்சன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான இரட்டை யர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் மற்றும் ரேடக் ஸ்டீபனெக் ஜோ டி இறுதிச் சுற்றில் வெற்றி பெற்று சாம் பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.  ஆடவருக்கான ஏ.டி.பி. சுற்றுப் பயண ப் போட்டிகளில் ஒன்று புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமியில் கடந் த ஒரு வார காலமாக நடைபெற்றது.  இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்ற முன்னணி வீரர்கள் களம் இறங்கினர். ஒரு வார காலமாக அமோகமாக நடந் த இந்தப் போட்டி நேற்று இறுதிச் சுற்று டன் முடிவடைந்தது.  இந்தப் போட்டியில் பங்கேற்ற முன்ன ணி வீரர்கள் தரமான ஆட்டத் திறனை வெளிப்படுத்தினர். அவர்களது ஆட்டத் திறன் கண்டு ரசிகர்கள் வியப்பில் ஆழ்ந்தனர்.  இந்தியாவின் லியாண்டர் பயஸ் இரட்டையர் பிரிவில் செக். குடியரசைச் சேர்ந்த ரேடக் ஸ்டீபனெக்குடன் இணைந்து ஆடினார்.இந்த ஜோடி இறுதிச் சுற்றில், கனடா மற்றும் பெலாரஸ் இணையை ச் சந்தித்தது.  பரபரப்பாக நடந்த இந்த இறுதிச் சுற்றி ல் இந்திய மற்றும் செக். ஜோடி அபார மாக ஆடி, 3 - 6, 6 - 1, 10 - 8 என்ற செட் கணக்கில் டேனியல் நெஸ்டர் மற்றும் மேக்ஸ் மிர்ன்யி இணையை வென்றது.  இந்தப் போட்டியில் பட்டம் வென்ற பயஸ் மற்றும் ரேடக் ஜோடி 7 -ம் நிலை ஜோடியாகும். இதில் தோல்வி அடைந்த நெஸ்டர் மற்றும் மேக்ஸ் இணை 2-ம் நிலை ஜோடியாகும்.
இந்தப் பட்டம் 38 வயதான லியாண்ட ருக்கு ஏ.டி.பி. உலக சுற்றுப் பயணப் போட்டியில் 50 - வது பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இந்த சாதனை படைத்த 24 -வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்று இருக்கிறார்.
கிராண்டன் பார்க்கில் நடந்த இந்தப் போட்டியில் லியாண்டர் 3 -வது முறை தொடர்ந்து பட்டம் வென்று இருக்கிறார். இதற்கு முன்பாக கடந்த 2010 -ல் லூகாஸ் டெளகியுடனும், 2011 - ல் மகேஷ் பூபதியுடனும் இணைந்து அவர் பட்டம் வென்று இருக்கிறார்.
-------------------------------------------------

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்