முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈரோட்டில் உலகில் அதிக பட்சமாக பித்த பையில் 4294 கற்கள் அகற்றம்

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

ஈரோடு,ஏப்ரல்.2- ஈரோடு ஆர்.என்  புதூரை சேர்ந்தவர் துரைசாமி( வயது62)  இவர் ஒய்வு பெற்ற கிராம நிர்வாக அதிகாரி. இவர் கடந்த பத்து வருடங்களாக சக்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.  அவருக்கு வாயு தொல்லை ஏற்பட்டதால் ஈரோடு ஈ.வி.என். ரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்.   அங்கு  அவருக்கு வயிற்று நோய் சிறப்பு அறுவை சிககிச்சை நிபுணர் டாக்டர் டி.கே.சாமி பரிசோதனை மேற்கொண்டார்.பின் டாக்டர் டி.கே.சாமி கூறியதாவது:துரை சாமிக்கு சக்கரை வியாதி  பத்து வருடங்களாக உள்ளது . அவருக்கு வாயு தொல்லை ஏற்பட்டதால் எண்டோஸ்கோப்பி,ஸ்கேன்செய்து பார்த்ததோம். சோதனையில் துரைசாமியின் வயிற்றில் பித்த பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.  அதை லேப்ராஸ் கோப்பி மூலம் அறுவை சிகிச்சை செய்து  அனைத்து கற்களும் அக ற்றப்பட்டன. நாங்கள் இது வரை 80 கற்கள் அகற்றி  உள்ளோம். உலகில் இது வரை 3110 கற்கள் ஒரு மூதாட்டியின் பித்த பையில் இருந்துஜெர்மணி நாட்டில் அகற்றப்பட்டது. இந்த கற்கள் மொத்த எடை 300 கிராம்  இருந்தது. தற்போது ஒருவர் வயிற்றில் பித்தபையில் இருந்து 429உலகில் இதுவே முதல் முறை.தொடர்ந்து டாக்டர் டி.கே.சாமி கூறுகையில் , பித்தபையில் கற்கள் இருந்தால் ஒருவர் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஒருவருக்கு  சக்கரை நோய் இருந்து பித்த பையில் கற்கள் இருந்தால் ,அவருக்கு கட்டாயம் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.ஏனென்றால் அவருக்கு பித்த பையில் கற்கல் இருந்தால் சீல் பிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.  அப்படி சீல் பிடித்தால் அது உயிருக்கு ஆபத்தாக முடியும்.மற்ற படி பித்த பையில் கற்கள் இருந்து அவருக்கு வாயு தொல்லை , அஜீரண க்கோளாறு ஏற்பட்டால்  , வயிற்று வலி ஏற்ற்பட்டால் கட்டாயம் அறுவை சிகிச்சை  செய்துகொள்ள வேண்டும்.  அதற்கு பித்தை பை அகற்று வதே சரியான தீர்வு . பித்த பை அகற்று வதால் நம் உடலுக்கு எந்த வித உபாதையும் ஏஹ்படாது. பித்த பை அகற்று வதால் உணவு ஜீரண மாவதில் எந்த பாதிப்பும் ஏற்படாது. பித்த பையில் உள்ள கற்களின் எண்ணிக்கை க்கும் எற்படும் உபாதைக்கும் எந்த சம்பந்தமும்கிடையாது. ஆயிரக்கணக்கில் கற்கள் இருந்தும் எந்த உபாதையும் ஏற்படாமல் இருக்கலாம். ஒரே ஒருகல் இருந்தும் அதனால் ஆபத்து ஏற்படலாம் . இந்த நிகழ்வை உலக சாதனை கின்னஸ்க்கு அனுப்ப உள்ளோம். இவ்வாறு டாக்டர் டி.கே.சாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்