முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வி.கே. சிங்கின் நேபாள பயண நாட்கள் குறைப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஏப். - 3 - ராணுவ தளபதி வி.கே. சிங்கின் நேபாள பயண நாட்களையும், குழு எண்ணிக்கையையும் பாதுகாப்பு அமைச்சகம் குறைத்துள்ளது.  வயது பிரச்சினை, ஊழல் குற்றச்சாட்டு, பிரதமருக்கு எழுதிய கடிதம் வெளியானது ஆகிய பிரச்சினைகளால் ராணுவ தளபதி வி.கே. சிங்குக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது. கடந்த மாதம் திட்டமிடப்பட்டிருந்த ராணுவ தளபதியின் இஸ்ரேல் பயணத்தை மத்திய அரசு ரத்து செய்தது. இஸ்ரேலில் பாதுகாப்பு நிலைமை சரியில்லை என்ற காரணத்தை காட்டி அப்பயணம் ரத்து செய்யப்பட்டது.  இந்த நிலையில் நேபாள தலைநகர் காத்மண்டுவில் பேரிடர் மேலாண்மை மற்றும் தீவிரவாத எதிர்ப்பு தொடர்பான 2 நாள் கருத்தரங்கம், வரும் 4 மற்றும் 5 ம் தேதிகளில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க நான்கு நாள் பயணமாக வி.கே. சிங் அதிகமான பிரதிநிதிகளுடன் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் அவர் அங்கு தங்கும் நாட்களையும், பிரதிநிதிகளின் எண்ணிக்கையையும் பாதுகாப்பு அமைச்சகம் குறைத்துள்ளது. இந்த பயணம் கருத்தரங்கத்திற்கு மட்டுமே என்பதால் கருத்தரங்கம் முடிந்த பிறகு தங்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் தளபதியின் பயண நாட்கள் குறைக்கப்பட்டதாக தெரிகிறது. இதன் படி 4 ம் தேதி புறப்படும் வி.கே. சிங், 6 ம் தேதி டெல்லி திரும்புகிறார். பயண நாட்கள் குறைப்புக்காக அவர் இந்த பயணத்தை ரத்து செய்ய மாட்டார் என்று பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தனர். இதற்கிடையே தரம் குறைந்த டாட்ரா லாரிகளை ராணுவத்துக்கு சப்ளை செய்ததில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வழக்கில் ரவி ரிஷி, நாட்டை விட்டு வெளியேற சி.பி.ஐ. தடை விதித்துள்ளது. இவர் லண்டன்வாழ் இந்திய தொழிலதிபர். வெக்ட்ரா குழும அதிபரான இவர் டாட்ரா லாரிகள் நிறுவனத்தில் பெரும் பங்குகள் வைத்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக இவரது பெயரையும், சி.பி.ஐ. தனது முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இவரிடம் ஏற்கனவே 2 முறை விசாரணை நடத்தி விட்டது. இந்த நிலையில் அவர் நாட்டை விட்டு வெளியேறாமல் இருக்க இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அனைத்து விமான நிலையங்கள் மற்றும் வெளியேறும் வழிகளை சி.பி.ஐ உஷார்படுத்தி உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்