முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கை-இங்கிலாந்து அணிகள் கொழும்பு நகரில் இன்று மோதல்

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

கொழும்பு, மார்ச். 26 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4 -வது காலிறுதிச் சுற்று ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன. பகலிரவு ஆட்டமாக நடக்கும் இந்தப் போட்டி கொழும்பு நகரில் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4-வது காலிறுதி ஆட்டம் கொழும்பில் இன்று நடக்கிறது. இதில் ஏ பிரிவில் 2 -வது இடத்தைப் பிடித்த இலங்கை, பி பிரிவில் 3 -வது இடத்தைப் பிடித்த இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. 

இலங்கை அணியில் ஜெயவர்த்தனே, கேப்டன் சங்கக்கரா, தில்ஷான், தரங்கா போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், முரளீதரன், மென்டிஸ் போன்ற சிறந்த பெளலர்களும் அந்த அணியில் உள்ளனர். 

இங்கிலாந்து, அணியின் பேட்டிங்கில் டிராட், பெல்,கேப்டன் ஸ்ட்ரா ஸ் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர். பெளலிங்கைப் பொறுத்த வரை ஸ்வான் மற்றும் பிரெஸ்னன் ஆகியோர் நன்கு பந்து வீசி வருகி ன்றனர். 

இங்கிலாந்து அணி லீக் போட்டியில் 2 தோல்வியைச் சந்தித்தது. ஒரு வழியாக தட்டுத் தடுமாறி காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இருந்த போதிலும், இலங்கை அணிக்கு எல்லா வகையிலும் சவால் கொடுத்து இங்கிலாந்து அணி விளையாடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

உலகக் கோப்பையில் இரு அணிகளும் இன்று 9 -வது முறையாக மோதுகின்றன. இதுவரை நடந்த 8 ஆட்டங்களில் இங்கிலாந்து 6 போ  ட்டியிலும், இலங்கை 2 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே இன்று நடக்க இருக்கும் 4 -வது காலிறுதி ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு துவங்குகிறது. இந்தப் போட்டி ஸ்டார் கிரிக்கெட், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொ லைக் காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. 

உலகக் கோப்பை காலிறுதிச் சுற்று ஆட்டம் கடந்த 23 -ம் தேதி துவங் கியது. முன்னதாக மிர்பூரில் நடந்த முதல் காலிறுதியில் பாகிஸ்தான் மற்றும் மே.இ.தீவு அணிகள் மோதின. இதில் ஒரு தரப்பாக நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்று அரை இறுதிக் குள் நுழைந்தது. 

இதனைத் தொடர்ந்து 2 -வது அரை இறுதி ஆட்டம் அகமதாபாத்தில் நடந்தது. இதில் இந்தியா மற்றும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா மோதின. இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது. 

பின்னர் 3 -வது காலிறுதி ஆட்டம்  வங்காளதேசத்தின் தலைநகரான டாக்கா அருகே உள்ள மிர்பூரில் நேற்று நடந்தது. இந்த ஆட்டத்தில்       தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்