முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு 12 1/2 லட்சம் பேர் எழுகிறார்கள்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 3 - தமிழகத்தில் இன்று எஸ்.எஸ்.எல்.சி தேர்வு தொடங்குகிறது. இம்மாதம் 23-ம் தேதி வரை தேர்வு நடைபெறுகிறது.எஸ்.எஸ்.எல்.சி., ஓ.எஸ்.எல்.சி., மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ​இந்தியன் (பழைய பாடத்திட்டம்) பொதுத்தேர்வுகள் இன்று(ஏப்ரல் 4​ம் தேதி) தொடங்கி 23​ம் தேதி வரை நடைபெற உள்ளன. இந்த தேர்வை மொத்தம் 12 லட்சத்து 44 ஆயிரத்து 799 மாணவ மாணவிகள் எழுதுகின்றனர். இவர்களில் 11 லட்சத்து 44 ஆயிரத்து 232 பேர் நேரிடையாக பள்ளிகளிலிருந்து எழுதுகிறார்கள். தனித்தேர்வர்களாக புதிய பாடமுறை 13 ஆயிரத்து 176 பேர் எழுதுகின்றனர். பழைய பாடத்திட்டத்தில் 81,028 பேர் எழுதுகின்றனர். தேர்வுக்காக 3,033 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. காப்பி அடிப்பதைத்தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை அமைத்து கண்காணிக்கப்படுகிறது. இவர்கள் தவிர மாவட்ட ஆட்சியர்கள்  அதிகாரிகளின் நேரிடையான ஆய்வும் இருக்கிறது. 4-ம்தேதி மொழித்தாள் பாடத்துடன் தேர்வு தொடங்குகிறது. எஸ்.எஸ்.எல்.சியுடன், மெட்ரிகுலேசன், ஆங்கிலோ இந்தியன், ஓ.எஸ்.எல்.சி  தேர்வுகளும் தொடங்குகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 51 ஆயிரத்து 664 பேர் எழுதுகின்றனர். ஏப்ரல் 4ம் தேதி (இன்று) மொழி தாள்​ 1, 9ம் தேதி மொழி தாள்​ 2, 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள், 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள், 16ம் தேதி கணிதம், 19ம் தேதி அறிவியல், 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடக்கிறது. திருவள்ளூர் கல்வி மாவட்டத்தில் 11,217 மாணவர்கள், 10,775 மாணவிகள் என மொத்தம் 21,992 மாணவ மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.
பொன்னேரி கல்வி மாவட்டத்தில் 15,343 மாணவர்கள், 14,329 மாணவிகள் தேர்வு எழுதுகின்றனர். மாவட்டம் முழுவதும் 26,560 மாணவர்கள், 25,104 மாணவிகள் என மொத்தம் 51,664 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதற்காக பொன்னேரியில் 74 தேர்வு மையங்களும், திருவள்ளூரில் 52 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் 6 பேர் அடங்கிய 10 பறக்கும்படை அமைக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்