முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொடைக்கானல் மலர்க்கண்காட்சிக்கு டில்லியில்இருந்து வரவழைக்கப்பட்ட புதியரகப்பூக்கள்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

கொடைக்கானல், ஏப்.- 3 - கொடைக்கானலில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள மலர் கண்காட்சிக்கு டில்லியில் இருந்து வரவழைக்கப்பட்டு கண்ணாடி அறையில் வைக்கப்பட்டுள்ள புதிய வகைப் பூக்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்து வருகிறது. மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் துவங்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வருகையும் அதிகரித்தவண்ணம் உள்ளது. இந்த ஆண்டு மலர் கண்காட்சிக்கு புதுடில்லியில் இருந்து உயர்ரக பூக்கள் வரவழைக்கப்பட்டு கண்ணாடி அறையில் வைக்கப்பட்டுள்ளது. ரென் அன்ட் பிளாஸ்ட் மற்றும் டெப்போடைல்ஸ் என்றழைக்கப்படும் இப்பூக்கள் வீரிய ரக விதையைக் கொண்டு வளரக்கூடியதாகும். கிழங்கு வகை பூக்களைக் கொண்ட இப்பூக்கள் அடுக்கடுக்காக மலரக்கூடியது. 4 வகை நிறம் கொண்ட இப்பூக்கள் குளிர் பிரதேசத்தில் மட்டுமே வளரக்கூடியதாகும். தற்போது 100 பூக்கள் வரவழைக்கப்பட்டு மலர் கண்காட்சியில் இடம் பெறும் வகையில் பிரையண்ட் பூங்காவில் கண்ணாடி அறையில் பார்வையாளர்களுக்காக வைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. இது தவிர ஒட்டுரக விதைகளைக் கொண்ட வளரக்கூடிய பூக்களும் மலர் கண்காட்சியில் இடம் பெறும் வகையில் தயார் படுத்தப்பட்டு வருகின்றன. பிரையண்ட் பூங்காவில் இந்த வருடம் அரை ஏக்கர் கூடுதல் பகுதி ஒதுக்கப்பட்டு பார்வையாளர்களின் வசதிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பூக்களை உள்நாட்டு பயணிகளும், வெளிநாட்டு பயணிகளும் மிகுந்த ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago