முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு எழுத புதிய நடைமுறை அமல்ஆர்.நட்ராஜ்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப். - 3 - டி.என்.பி.எஸ்.சி. தேர்வெழுத புதிய முறை அமுலாக்கப்பட்டுள்ளது. ரூ.50 விண்ணப்ப கட்டணத்தை செலுத்தி விட்டு, இணைய தளத்தில் பதிவு செய்தால் 5ஆண்டுகள் வரை போட்டித் தேர்வுகளை எழுதலாம் என்று, டி.என்.பி.எஸ்.சி. தலைவர் ஆர்.நட்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து விபரம் வருமாறு:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் ஆர்.நட்ராஜ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ள பதவிகளுக்கு விண்ணப்பிக்க புதிய முறையை அறிமுகம் செய்துள்ளோம். இணையதளத்தில் சீர்திருத்தம் செய்து புதிதாக வெளியிடுகிறோம்.  முதற்கட்டமாக வேலைவாய்ப்புக்கான 12 அறிவிப்புகள் இதில் வெளியிடப்பட்டுள்ளன. 16 பதவிகளுக்கு 158 காலி இடங்களுக்கான அறிவிப்பும் இன்று (நேற்று) வெளியாகி உள்ளது. காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஒரே முறை பதிவு செய்யும் திட்டம் புதிதாக அறிமுகம் செய்துள்ளோம்.   இதில் ரூ. 50 செலுத்தி இருந்த திட்டத்தில் சேர்ந்து கொண்டால் 5 ஆண்டு களுக்கு விண்ணப்பதாரர்கள் தங்களது தகுதிக்கேற்ப தேர்வு எழுதலாம். ஒவ்வொரு தேர்வுக்குரிய தகவல்கள் இந்த இணைய தளத்தில் தெரிவிக்கப்படும்.
தமிழகத்தில் 285 தாலுக்காக்கள் உள்ளன.
இங்குள்ள தபால் நிலையங்களில் டி.என்.பி.எஸ்.சி.யின் உதவி மையங்கள் செயல்படும். கிராமப்புற மாணவர்கள் எளிதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் இலவசமாக புகைப்படம் எடுத்து கொள்ளலாம். இந்த உதவி மையங்களில் கம்ப்யூட்டர் வசதி, தடையில்லா மின்சாரம், பிரிண்டர் வைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர மேலும் 500 உதவி மையங்களும் அமைக்கப்படுகின்றன. இந்த இணையதளத்தில் தேர்வாணைய செயல்பாடு குறித்த தகவல், தேர்வர்களுக்கு வேண்டிய தகவல்கள் கொடுக்கப்படும்.   அரசு ஊழியர்களின் துறை சார்ந்த தேர்வுகள் அதுபற்றிய தகவல்கள், முடிவுகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது டி.என். பி.எஸ்.சி. செயலாளர் உதயசந்திரன் உடன் இருந்தார். முன்னதாக புதிய இணையதளத்தை டி.என்.பி.எஸ். தலைவர் ஆர்.நட்ராஜ் தொடங்கி வைத்து விளக்கம் அளித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்