முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜ்ய சபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, மார்ச்.26 - பாராளுமன்றத்தின் ராஜ்ய சபை மறு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. பாராளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த பிப்ரவரி 21 ம் தேதி துவங்கியது. அன்றைய தினம் பாராளுமன்றத்தின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் உரை நிகழ்த்தினார். இதை அடுத்து பிப்ரவரி 26 ம் தேதி ரயில்வே பட்ஜெட்டும் பிப்ரவரி 28ம் தேதி பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த பட்ஜெட் மீதான விவாதங்கள் ராஜ்ய சபை , லோக் சபை ஆகிய இரு சபைகளிலும் நடைபெற்றது.

இந்த கூட்டத்தொடரின் போது ராஜ்ய சபையில் விக்கி லீக்ஸ் இணைய தளத்தில் வெளியான ஓட்டுக்கு பணம் விவகாரத்தின் காரணமாக சுமார் 20 மணி நேரம் வீணானது.

2008 ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அரசு மீதான நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது எம்.பி.க்களுக்கு லஞ்சம் கொடுத்தது தொடர்பாக பா.ஜ.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் பெரும் பிரச்சினையை கிளப்பி அமளியில் ஈடுபட்டன. இதே போல மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையராக பி.ஜே. தாமஸ் நியமிக்கப்ப்டட விவகாரமும் ராஜ்ய சபையில் பெரும் பிரச்சினை கிளப்பப்பட்டது.

20 மணி நேரம் வீணாகிப்போனலும் கூட அதை ஈடுகட்ட மதிய உணவு வேளையில் கூட ராஜ்ய சபை கூட்டம் நடந்தது. மேலும் வழக்கமான நேரத்தை காட்டிலும் கூடுதலாக 12 மணி நேரம் எடுத்துக்கொள்ளப்பட்டு அரசு அலுவல்கள் நிறைவேற்றப்டட்ன.

நேற்று காலை சபை கூடியதும் பாக்கி இருந்த அரசு அலுவல்கள் எல்லாம் முடிக்கப்பட்டன. பிறகு  சபையை சபையின் தலைவர் ஹமீது அன்சாரி மறு தேதி குறிப்பிடாமல் கால வரையின்றி ஒத்திவைத்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony