முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிடர்களுக்கான நிதி அவர்களுக்கே செலவு செய்யப்படும்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 4 - ஆதிதிராவிடர்களுக்கான நிதி அவர்களுக்கே செலவு செய்யப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். உறுப்பினர் பேச்சுக்கு பதலளித்து, முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது:- ஆதிதிராவிட மக்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி இந்த ஆட்சியில் அவர்களையே போய்ச் சேரும் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் இருக்கவேண்டிய அவசியமில்லை.  (மேசையைத் தட்டும் ஒலி)  ஆதிதிராவிடர் நலத்துறையில் ஒரு தொகையும், வேறு துறைகளில் சில தொகைகளும் ஒதுக்கப்பட்டிருக்கின்றன.  ஆகவே, இந்தத் தொகைகள் எல்லாம் ஆதிதிராவிட மக்களைச் சென்றடைகிறதா என்பதைக் கண்காணிக்க ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி வேண்டுமென்று  உறுப்பினர் கேட்டிருக்கிறார்.  அது தேவையில்லை என்பது இந்த அரசின் கருத்து.  உதாரணத்திற்கு, இலவச கறவை மாடுகள், ஆடுகள் வழங்குகிற திட்டத்தில் பயனாளிகளில் 30 சதவிகிதம் பேர் ஆதி திராவிடர்களாக இருக்க வேண்டுமென்று (மேசையைத் தட்டும் ஒலி) அரசே நிர்ணயித்துள்ளது.  இதைக் கண்காணிக்க தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி இல்லை.  அந்தத் துறை அதிகாரிதான் அதைக் கவனிக்கிறார்.  செவ்வனே போய் ஆதி திராவிடர் மக்களை இந்த மாடுகளும், ஆடுகளும் போய்ச் சேர்ந்து கொண்டிருக்கின்றன என்பதை உதாரணத்திற்காகச் சொல்கிறேன்.  இதைப்போலத்தான், மற்ற துறைகளில் ஒதுக்கப்பட்டிருக்கிற நிதியும் ஆதிதிராவிடர் மக்களையே சென்றடையும் என்பதில் யாருக்கும் எந்தவித ஐயப்பாடும் தேவையில்லை.  (மேசையைத் தட்டும் ஒலி)   இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்