முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குழந்தைகளை பிச்சை எடுக்க வைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஏப்.- 4 - மதுரையில் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் குழந்தைகளை கொடுமைப்படுத்தி பிச்சை  எடுக்கவைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். மதுரை சமூக அறிவியல் கல்லூரியின் சார்பாக மத்திய அரசின் சார்பாக மத்திய அரசின் சமூக நீதிமற்றும் ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் நிதி உதவியுடன் பிச்சைகாரர்களின் வாழ்க்கை நிலை குறித்து ஆய்வு பணி நேற்று தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சமூக அறிவியல் கல்லூரியின் அசோசியேட் பேராசிரியர் கண்ணன் வரவேற்புரையாற்றினார். கல்லூரியின் சேர்மன் கேப்டன் டி.வி.பி. ராஜா, மேயர் ராஜன்செல்லப்பா, போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் மாநகராட்சி கமிஷனர் ஆறுமுக நயினார் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் போலீஸ் கமிஷனர் கண்ணப்பன் பேசும்போது கூறியதாவது: பிச்சைகாரர்களின் வாழ்க்கைநிலை குறித்த ஆய்வு பணி நேற்று தொடங்கப்படுகிறது. பிச்சைகாரர்களில் சிலர் குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கின்றனர். குழந்தைகளை வாடகைக்கு எடுத்தோ அல்லது குழந்தைகளை திருடி மற்றும் குழந்தைகளை திருடி மற்றும் குழந்தைகளை கொடுமைப்படுத்தியும் சிலர் பிச்சைஎடுக்கின்றனர்.
குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை பற்றிய தகவல்கள் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டால் உடனடியாக அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து  குழந்தையை உரிய பெற்றோரிடம் ஒப்படைக்கப்படும் என்று தனது பேச்சின்போது தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்