முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெண்ணை பற்றி காங்கிரஸ் எம்.எல்.ஏ பேச்சு புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.- 4 - காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று காங்கிரஸ் உறுப்பினர் புகாருக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலடி கொடுத்தார். நேற்று  சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் ஜான் ஜோக்கப் பேசும்போது, ஒரு  பெண் பாதிக்கப்பட்டார் என்றும்,   அவரின் எதிர்காலம் குறித்து புகார் கொடுக்கரில்லை என்றும் கூறி, காவல் துறையும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். அப்போது முதல்வர் ஜெயலலிதா: உறுப்பினர் ஒரு பெண் சம்பந்தப்பட்ட ஒரு சம்பவத்தை இங்கே குறிப்பிட்டு, அந்தப் பெண்ணின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் புகார் தரவில்லை என்கிறார்.  புகார் தராதபோது, காவல் துறை எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்?  nullங்கள் புகார் கொடுக்கச் சொல்லுங்கள், நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அப்புறம் சொல்லுங்கள்.  

பொத்தாம் பொதுவாகக் குற்றச்சாட்டு சொல்வது தவறு.  பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது.  பாதிக்கப்பட்டவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்குச் சென்று, அங்கே புகார் கொடுக்க வேண்டும்.  எழுத்தில் கொடுக்க வேண்டும். அப்போதுதான் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க முடியும்.  புகாரே கொடுக்காமல், காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டுவது சரியல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago