முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி 8ம் தேதி ஆக்ரா வருகை

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 5 - பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி இம்மாதம் 8 ம்தேதி ஆஜ்மீர் தர்ஹாவில் பிரார்த்தனை செய்ய இருக்கிறார்.  பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி வருகிற 8 ம் தேதி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். அன்றையதினம் டெல்லி வரும் அவர், பிற்பகலில் ஆஜ்மீரில் உள்ள புகழ்பெற்ற இஸ்லாமிய ஞானி குவாஜா மொய்னுதீன் ஹசன் தர்ஹாவுக்கு வருகைதர இருக்கிறார். அப்போது அவர் அந்த தர்ஹாவில் சிறப்பு பிரார்த்தனை செய்ய இருக்கிறார். டெல்லியில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஆஜ்மீர் வரும் சர்தாரி, தர்ஹாவில்  சுமார் அரை மணி நேரம் தங்கியிருப்பார். பிறகு அவர் ஜெய்ப்பூர் வழியாக மீண்டும் டெல்லி புறப்பட்டு செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்