முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரஞ்சீவி மருமகனுக்கு ஜாமீன் மறுப்பு

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத்,மார்ச்.26 - வரதட்சணை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள நடிகரும், அரசியல்வாதியுமான சிரஞ்சீவியின் மருமகன் கிரிஷ் பரத்வாஜிற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. சிரஞ்சீவி மகள் ஸ்ரீஜா கடந்த 14 ம் தேதியன்று தனது கணவர் மற்றும் மாமியார் கடந்த ஒரு வருடமாக தன்னை வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையம் இவர்கள் மீது வரதட்சணை பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தது. 

வழக்கு பதிவு செய்யப்பட்ட கிரீஷ் தனது தாயாருடன் கடந்த வாரம் செசன்ஸ் கோர்ட்டில் முன் ஜாமீனுக்கு மனு செய்திருந்தார். புகாரில் முகாந்திரம் உள்ளதால் கிரிஷீற்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுத்து விட்டது. அவரது தாயாருக்கு ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள பத்திரம் மற்றும் அதே அளவிலான இரு நபர் ஜாமீனுடன் முன்ஜாமீன் வழங்கியது. மேலும் அவர் ஐதராபாத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றும் இரு நாட்களுக்கு ஒருமுறை காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனஅறும் வழக்குக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது. 

சிரஞ்சீவியின் இளைய மகள் ஸ்ரீஜா, தனது குடும்பத்தாரின் விருப்பத்தை மீறி கடந்த 2007 ல் ஆரிய சமாஜத்தில் கிரீஷை திருமணம் செய்து கொண்ட டெல்லிக்கு சென்று விட்டார். தனது குடும்பத்தாரிடம் இருந்து பாதுகாப்பு கேட்டு அங்கு நீதிமன்றத்தையும் அவர் அணுகினார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony