முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி பங்குனி உத்திர திருவிழா இன்று திருத்தேரோட்டம்

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

பழனி, ஏப். - 5 - பழனி பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.  பழனி பங்குனி உத்திர திருவிழா கடந்த 30 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.  இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கொடுமுடி காவிரியாற்றில் தீர்த்த காவடிகள் எடுத்து வந்தனர். மலைக்கோயில் வந்ததும் பக்தர்கள் முருகப் பெருமானுக்கு தீர்த்த காவடி நீரை அபிஷேகம் செய்து வழிபாடு நடத்தினர்.  பழனி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சவுமிய நாராயண நாயக்கர் சமூகத்தினர் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாணத்தை சிறப்பாக நடத்தினர். பின்பு இரவு 8.30 மணிக்கு வெள்ளி ரதம் தேரோட்டம் நடைபெற்றது. வெள்ளி ரதத்தில் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வீற்றிருந்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.  பழனி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி 4.30 மணிக்கு கிரி வீதியில் திருத்தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி ஏராளமான முருக பக்தர்கள் தீர்த்த காவடிகளுடன் மேளதாளங்கள் முழங்க பழனியை நோக்கி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் பழனியில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி ஆகியோர் செய்துள்ளனர். திருக்கல்யாணத்தில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன்,துணை ஆணையர் மங்கையற்கரசி, சித்தனாதன் சன்ஸ் எஸ்.ஜி. சிவநேசன், எஸ்.ஜி. தனசேகர், எஸ்.ஜி. பழனிவேலு, கந்தவிலாஸ் என். செல்வகுமார், என். பாஸ்கரன், மலைக்கோயில் பிரசாத ஸ்டால் என். அரிகரமுத்து, அரிமா சங்க சுந்தரம், எம்.எல்.ஏவின் நேர்முக உதவியாளர் பெரியசாமி உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்