முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சமாஜ்வாடி கட்சி எம்.பி. தேர்தலில் போட்டியிட தடை

சனிக்கிழமை, 26 மார்ச் 2011      இந்தியா
Image Unavailable

 

காசியாப்பூர்,மார்ச்.26 - சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த ராதே மோகன் என்ற எம்.பி. தேர்தலில் போட்டியிட 3 ஆண்டுகளுக்கு தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம் காசியாப்பூர் லோக் சபை தொகுதியிலிருந்து கடந்த 2009 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ராதே மோகன் .இவர் முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாடி கட்சியை  சேர்ந்தவர்.

இவர் தேர்தல் செலவு கணக்குகளை தேர்தல் கமிஷனிடம் குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும்.ஆனால் தேர்தல் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும் கூட இவர் தனது தேர்தல் செலவு கணக்கு விவரங்களை தேர்தல் கமிஷனிடம் தாக்கல் செய்யவில்லை.

இது குறித்து தேர்தல் கமிஷன் அதிகாரிகள் பல முறை நோட்டீஸ் அனுப்பியும் கூட அவர் எந்த கணக்கையும் தாக்கல் செய்யவில்லை.

எனவே இவர் 3 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தேர்தல் கமிஷன் தடை விதித்துள்ளதாக தேர்தல் கமிஷன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony