முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக்காய்ச்சல் நோயை தடுக்க சென்னையில் 4 லட்சம் மாத்திரைகள்

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். - 5 - தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருப்nullர் ஆகிய பகுதிகளில் எச்.1 என்.1 என்ற வைரஸ் மூலம் பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. திருப்nullர் மாவட்டம் என்.கவுண்டம்பாளையத்தில் கந்தசாமி என்ற விவசாயி பன்றிக்காய்ச்சலுக்கு பலியானார். கந்தசாமியின் மனைவி காவேரி, மருமகன் வெற்றிவேல் ஆகியோருக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறி காணப்பட்டது. அவர்களுக்கு கோவை அரசு மருத்துமனையில் பரிசோதனை நடந்தது. இதில் அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் இல்லை என தெரியவந்தது. இதையடுத்து 2 பேரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே சென்னையில் புதிதாக 4 பேருக்கு பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. அம்பத்தூர், தரமணி, சைதாப்பேட்டை, வேளச்சேரி ஆகிய பகுதியில் 2 ஆண்களும், 2 பெண்களும் பன்றிக்காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். பாதிக்கப்பட்டவர்களில் ஒரு ஆணுக்கு 55 வயது, மற்ற 3 பேரும் 18 வயது முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள். சென்னையில் 4 பேர் பன்றிக் காய்ச்சலுக்கு நேற்று முதல் சிகிச்சை பெற்று வருவதாக அரசுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் சிகிச்சை பெறும் 4 பேரையும் சந்தித்து ஆய்வு செய்தனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படு வதாகவும் எந்த ஆபத்தும் இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.  2 நாட்களுக்கு முன் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 சிறுமிகள் சிகிச்சை பெற்று வந்தனர். திடீர் என்று டாக்டர்களிடம் தெரிவிக்காமல் 2 சிறுமிகளும் வீட்டுக்கு சென்று விட்டனர். மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள் 2 சிறுமிகளையும் தேடி கொருக்குப்பேட்டையில் கண்டுபிடித்தனர். இருவரும் தொடர்ந்து பன்றிக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சை பெற்று வருகிறார்கள். சென்னை நகரில் யாராவது காய்ச்சல் உள்பட தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றால் இது குறித்து உடனடியாக மாநகராட்சிக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து மருத்துமனைகளுக்கும் மாநகராட்சி உத்தரவிட்டு இருந்தது. இதன்மூலம் பன்றிக் காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டுள்ளோர் விவரம் தெரியவந்தது.

காய்ச்சல், தொண்டைவலி, இருமல், உடல்வலி, தலைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் முக்கிய அறிகுறிகளாகும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவரின் தும்மல், இருமல் மூலம் மற்றவர்களுக்கு பரவ வாய்ப்பு இருப்பதால் அவர்களுக்கு தகுந்த பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து யாராவது வருகிறார்களா? என்று கண்காணிக்குமாறு சென்னை விமான நிலைய அதிகாரிகளுக்கு தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

திருப்nullர் மாவட்டத்தில் பலியான விவசாயி கந்தசாமியின் மகள் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் நடந்தது. இதில் பெங்களூரைச் சேர்ந்த 3 இளைஞர்கள் கலந்து கொண்டனர். அவர்களில் யாருக்காவது பன்றிக்காய்ச்சல் இருந்திருக்கலாம் என்றும், அவர்கள் மூலம் பரவி இருக்கலாம் என்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து வெளிமாநிலம், வெளி நாட்டினர் மீது கண் காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு கூடுதலாக டாக்டர்கள், நர்சுகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பன்றிக்காய்ச்சல் அறி குறியுடன் யாராவது பயணிகள் வருகிறார்களா? என்று கண்காணித்து பரிசோதிக்கிறார்கள்.

தடுப்பு நடவடிக்கைகளில் முதல் கட்டமாக பன்றிக் காய்ச்சல் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் ஆகியோருக்கு தடுப்nullசி போடப்படும் என்று சுகாதாரத்துறை இயக்குனர் பொற்கை பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

கடந்த 3 மாதங்களில் 15 பேருக்கு பன்றிக் காய்யச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவர் பலியானார். பன்றிக் காய்ச்சலைத் தடுக்கும் டேமி ப்ளூ மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தலைநகர் சென்னையில் மட்டும் 4 லட்சம் மாத்திரைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட மருத்துவமனைக்களுக்கும் டேமி ப்ளூ மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை மையமும், சிகிச்சைக்காக தனி வார்டும் அமைக்கப்பட்டுள்ளன என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்