முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க ஐகோர்ட் இடைக்கால தடை

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 4 - மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என்ற தீர்ப்புக்கு உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மக்கள் நலப் பணியாளர்களை பணி நீக்கம செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மக்கள் நலப் பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேரை பணியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி சுகுணா ஜனவரி 23-ந் தேதி உத்தரவு பிறப்பித்து இருந்தார். தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, சென்னை உயர்நீதிமன்றம் பெஞ்சில் தமிழக அரசு மேல் முறையீடு செய்திருந்தது. அந்த வழக்கு நேற்று நீதிபதிகள் தர்மாராவ், வேணுகோபால் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் வாதாடிய அட்வகேட் ஜெனரல் நவநீத கிருஷ்ணன் மக்கள் நலப் பணியாளர்கள் நியமனத்தில் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பது உள்ளிட்ட பலவற்றை சுட்டிக் காட்டி வாதிட்டார். அதனை ஏற்றுக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு நீதிபதிகள், தனி நீதிபதியின் தீர்ப்புக்கு இடைக்கால தீர்ப்பு விதித்து உத்தரவு பிறப்பித்தனர். மேலும் மக்கள் நலப் பணியாளர்களின் 2 சங்கங்களும், இம்மாதம் 18-ந் தேதிக்கு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறினார். அன்று இதற்கான இறுதி விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்