முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி பங்குனி உத்திர திருவிழா: பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது திருத்தேர்

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

பழனி, ஏப். - 6 - பழனி பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 30 ம் தேதி திருஆவினன்குடி முருகன் கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அது முதல் ஏராளமான முருக பக்தர்கள் விரதம் மேற்கொண்டு கொடுமுடி வைகை ஆற்றில் இருந்து சிறு குடங்களில் நீரை சேகரித்து தீர்த்தக் காவடியாக ஆடிப் பாடி வந்து மலைக்கோயிலில் அமைந்துள்ள முருகப் பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது.  பழனி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி 4 ம் தேதி இரவு 8 மணிக்கு சவுமிய கவுர நாயக்கர் மண்டபத்தில் முருகன், வள்ளி, தெய்வானை திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு வெள்ளி ரத தேரோட்டம் நடைபெற்றது. வெள்ளி ரதத்தில் வீற்றிருந்த முருகப் பெருமான், வள்ளி, தெய்வானை ஆகியோர் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, கணக்கியல் அதிகாரி ஜெயபிரகாஷ், சித்தனாதன் சன்ஸ் எஸ்.ஜி.தனசேகர், எஸ்.ஜி. பழனிவேலு, சங்கராலயம் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.  நேற்று 5 ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமார சுவாமி தீர்த்தவாரிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், காலை 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து காலை 8 மணிக்கு அடிவாரம் கணபதி ராமலிங்க நிலையம் எழுந்தருளலும், காலை 8.55 மணஇக்கு தந்தப் பல்லக்கில் திருஆவினன்குடிக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. காலை 11 மணிக்கு மிதுன லக்னத்தில் வள்ளி, தெய்வானையுடன் திருத்தேருக்கு சுவாமி எழுந்தருளினார். மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி கோயிலின் பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வம் ஆகியோர் சிறப்பு தீபாராதனைக்குப் பின் நடைபெற்றது.  இதில் கோயில் நிர்வாக அதிகாரி பாஸ்கரன், துணை ஆணையர் மங்கையற்கரசி, மேலாளர் ரவி, பேஸ்காரர்கள் பன்னாடி முருகேஷ், ராமலிங்கம், பன்னீர், கணக்கியல் அதிகாரி ஜெயபிரகாஷ், வேணுகோபாலு எம்.எல்.ஏ. பழனி யூனியன் சேர்மன் ஏ.டி. செல்லசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம், நகர்மன்ற தலைவர் வேலுமணி, சித்தனாதன் சன்ஸ் எஸ்.ஜி. சிவநேசன், எஸ்.ஜி. தனசேகர், எஸ்.ஜி. பழனிவேலு, கந்தவிலாஸ் என். செல்வகுமார், என். பாஸ்கரன், மலைக்கோயில் பிரசாத ஸ்டால் அதிபர் என். அரிகரமுத்து, பில்டிங் காண்டிராக்டர் நேரு, நியு திருப்பூர் லாட்ஜ் மகேஷ், சங்கர் அன் கோ உரிமையாளர்கள் எஸ். சுந்தர், எஸ். குமார், சபரி டெக்ஸ் தண்டபாணி, சரவணன், ஜோதிகேஸ் வேலுச்சாமி, பாட்டையா ஓட்டல் கங்கா அதிபர், பட்டையா பாபு, எம்.எஸ்.பி.எம். என்டர்பிரைசஸ் அதிபர் ராஜ்குமார், திருமலை சாமி ஓட்டல் டி. பாபு, அரிமா சங்க தலைவர் சுந்தரம், சுப்ரமண்யா பொறியியல் கல்லூரி தலைவர் ஜனார்த்தனன், துணை தலைவர் பாபுராஜ், செந்தில் பிளாஸ்டிக் செந்தில்குமார், சுப்ரமண்யா கலை அறிவியல் கல்லூரி சுப்பிரமணி, கே.வி. மருத்துவமனை டாக்டர்கள் வேலுச்சாமி, சந்திரலேகா, ஓட்டல் ராயல் பார்க் உரிமையாளர் சாகுல் அமீது, பொள்ளாச்சி ஜெயராமன், பழனி டி.எஸ்.பி. குப்புராஜ், இன்ஸ்பெக்டர் ரவி, கவுன்சிலர்கள் சுந்தர், பத்மினி முருகானந்தம், மகேஸ்வரி, சக்திவேல் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்