முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு, ராணுவம் மீது சேற்றை வாரி இறைக்க முயற்சிகள் நடக்கின்றன

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 6 - டெல்லியை நோக்கி ராணுவம் முன்னேறியதாக வெளியான செய்தி குறித்து கருத்து தெரிவித்த ராணுவ தளபதி வி.கே.சிங்  மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் மீது இழுக்கை ஏற்படுத்த இது போன்ற தேவையில்லாத முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்றார். கடந்த ஜனவரி மாதம்  16 - 17 தேதி நள்ளிரவில் ஹிஸ்ஸார் என்ற இடத்திலிருந்து  டெல்லியை நோக்கி ராணுவ வாகனங்கள் முன்னேறி  சென்றதாக சமீபத்தில் பத்திரிகைகளில் செய்திகள் வெளியாயின. ராணுவ தளபதி வி.கே.சிங் தனது  வயது பிரச்சினை தொடர்பாக  சுப்ரீம் கோர்ட்டை அணுகிய நாள் அன்றுதான் இந்த சம்பவம் நடந்ததாகவும்  அந்த செய்திகள் தெரிவிக்கின்றன. ஒரு வேளை ராணுவப்புரட்சியக்காக இது நடந்திருக்கலாமோ என்ற சந்தேகத்தையும் இந்த செய்திகள் ஏற்படுத்தியுள்ளன. இந்த செய்திக்கு பிரதமர் மன்மோகன் சிங், ராணுவ அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோர் ஏற்கனவே தங்களது மறுப்புக்களை தெரிவித்துள்ள நிலையில் இது வரை இது குறித்து வாய் திறக்காத ராணுவ தளபதி  வி.கே. சிங் நேற்று இது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் மனிதாபிமான உதவிகள் குறித்த 3 நாள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேபாள தலைநகர் காத்மண்டு சென்றுள்ள வி.கே.சிங்கிடம் ராணுவ நடமாட்டம் குறித்து வெளியான செய்தி குறித்து கருத்து கேட்டதற்கு  மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் மீது இழுக்கை ஏற்படுத்த இது போன்ற தேவையில்லாத முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார். இது முழுக்க முழுக்க முட்டாள்தனமானது. ராணுவத்திற்கு எதிராக இது போன்ற கதைகளை விடுபவர்கள்  யாராக இருந்தாலும்  அவர்கள் கண்டிக்கத்தக்கவர்கள் என்றும் சிங் கூறினார்.

இப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்