முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உ.பி.தேர்தல் தோல்விக்கு காரணம் என்ன? ஆய்வை துவக்கினார் ராகுல் காந்தி

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஏப்.- 6 - உ.பி.யில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததற்கு காரணம் என்ன என்பது  காங்கிரஸ் பொதுச்செயலாளர்  ராகுல் காந்தி நேற்று தனது ஆய்வு பணிகளை துவக்கினார். உத்தர பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில்  காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்றுக்கொள்வதாக அறிவித்த ராகுல் காந்தி இப்போது இந்த தோல்விக்கு காரணம் என்ன என்பது குறித்த ஆய்வை தொடங்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை உ.பி.யில்  பலப்படுத்துவற்கான முயற்சிகளிலும்  ராகுல் ஈடுபட்டுள்ளார். சட்டமன்ற தேர்தலில் 20 ஆயிரம் ஓட்டுக்கள் பெற்று தோல்வியை தழுவிய காங்கிரஸ் வேட்பாளர்களுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வு கூட்டம் கடந்த வாரமே நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பல்வேறு காரணங்களினால் தாமதமாக நேற்று துவங்கியது. இந்த இரண்டு நாள் ஆய்வு கூட்டம் இன்றும் நடக்கிறது. இன்று நடக்கும் இரண்டாவது நாள் ஆய்வு கூட்டத்தில் உ.பி.சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும்  காங்கிரஸ் எம்.பி.க்கள் பங்கேற்பார்கள். கடந்த 2009 ம் ஆண்டுநடந்த பாராளுமன்ற தேர்தலின் போது உ.பி.யில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் 22 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி  வெற்றி பெற்றது. இதை அடுத்து சட்டமன்ற தேர்தலிலும் இக்கட்சி பெரும் வெற்றியை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட  நிலையில்தான் சட்டமன்ற தேர்தலில் இக்கட்சி படுதோல்வியை பெற்றது. உ.பி. காங்கிரஸ் விவகாரங்களை கவனிக்கும் காங்கிரஸ் பொது செயலாளர் திக்விஜய் சிங் தற்போது வெளிநாட்டில் சுற்றுப்பயணத்தில் இருப்பதால் அவரால் இந்த ஆய்வுக்கூட்ட த்தில் பங்கேற்க இயலவில்லை. சமீபத்தில் நடந்த உ.பி. சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 403 இடங்களில்  காங்கிரஸ் கட்சி வெறும் 28 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்