முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தங்க நகை வியாபாரிகளுடன் பிரணாப் முகர்ஜியை சந்தித்தார் லாலு பிரசாத்

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஏப்.- 6 - டெல்லியில் நேற்று தங்க நகை வியாபாரிகளுடன் நிதி அமைச்சர் பிரணாப்  முகர்ஜியை  ராஷ்டிரிய  ஜனதா  தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ் சந்தித்தார். அப்போது தங்கத்தின் இறக்குமதி மீதான வரி உயர்வையும்  தங்க ஆபரணங்களுக்கான கலால் வரி உயர்வையும் திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த மாதம் பாராளுமன்றத்தில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி  2012 - 13 ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை  தாக்கல் செய்தார். அப்போது  தங்க இறக்குமதிக்கான வரியையும்  தங்க ஆபரணங்கள் மீதான கலால் வரியையும் உயர்த்தி அவர்  அறிவிப்பு வெளிய்டார். இதற்கு நாடு முழுவதும் உள்ள தங்க நகை வியாபாரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகம், குஜராத், உ.பி. உள்ளிட்ட  பல மாநிலங்களில் தங்க நகை வியாபாரிகள்  இந்த வரி உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்று கோரி ஆர்ப்பாட்டங்களையும் போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தங்க நகை வியாபாரிகள்  ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத்திடம்  தங்கள் குறைகளை எடுத்துக்கூறினர். இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜியை  சந்தித்து முறையிட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர். அந்த வேண்டுகோளை ஏற்று உ.பி. தங்க நகை வியாபாரிகள்  சங்க பிரதிநிதிகளுடன் லாலு பிராசாத் நேற்று டெல்லிசென்றார். இக்குழுவில் முன்னாள்  மத்திய அமைச்சர்  பிரேம் சந்த் குப்தாவும் உடன் சென்றிருந்தார்.  பிரணாப் முகர்ஜியை சந்தித்த இவர்கள்  தங்க இறக்குமதி மீதான வரி உயர்வு, தங்க ஆபரணங்கள் மீதான கலால் வரி உயர்வு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று வற்புறுத்தினார்கள்.

கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேலை நிறுத்தம் செய்து வரும் தங்க நகை வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பிரணாப் முகர்ஜியை  வலியுறுத்தியதாக இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய லாலு பிரசாத் தெரிவித்தார்.

தங்க நகை வியாபாரிகளின் குறைகளை பிரணாப் முகர்ஜி கவனத்துடன் கேட்டறிந்தார் என்றும் அவர் கூறினார். தங்க நகை வியாபாரிகளின் குறைகளை தீர்க்க பிரணாப் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் கூறினார். இக்குழுவினருடன் அகில இந்திய தங்க நகை வியாபாரிகள் சங்க பொதுச்செயலாளரும் உடன் இருந்தார். டெல்லி, பீகார் மாநிலங்களை சேர்ந்த தங்க நகை வியாபாரிகள் பெருமளவில் இந்த குழுவில் இடம் பெற்று இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்