முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சயீத்தின்மறைவிட ஆதாரத்தை தாருங்கள் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஏப். - 6 - ரூபாய் 50 கோடி பரிசு அறிவிக்கப்பட்ட தீவிரவாதி சயீத் மறைவிடம் பற்றிய ஆதாரங்களை தரும்படி பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.  பயங்கரவாத அமைப்புகளான லஸ்கர் இ தொய்பாவின் நிறுவனரும், தலைவருமான ஹபீஸ் சயீத் மும்பை மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டு வெடிப்பு மற்றும் தீவிரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்டவன். இவனை இந்தியா மட்டுமின்றி அமெரிக்காவும் தேடி வருகிறது. இவனை பற்றிய உறுதியான பயனுள்ள தகவல்களை அளிப்போருக்கு ரூ. 50 கோடி பரிசளிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.  இந்நிலையில் ஹபீஸ் சயீத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது. அவனது இருப்பிடம் மற்றும் அவனை பற்றிய பலமான ஆதாரங்களை தரும்படியும் அமெரிக்கா வற்புறுத்தி வருகிறது. சயீத் மட்டுமின்றி அவரது மைத்துனரும் தீவிரவாத அமைப்பின் மற்றொரு தலைவருமான அப்துல் ரஹ்மான் மக்கி என்பவனுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.  இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் மார்க்டோனர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, சயீத் மற்றும் அப்துல் ரஹ்மான் மக்கி ஆகிய இருவரும் எங்கு இருக்கிறார்கள் என்பது பாகிஸ்தானுக்கு நன்கு தெரியும். இருவரும் பாகிஸ்தானில் சுதந்திரமாக நடமாடி வருகின்றனர். இது குறித்து அங்குள்ள ஒவ்வொரு பத்திரிகையாளருக்கும் கூட நன்கு தெரியும். இருவரையும் எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது எங்களுக்கும் நன்றாகவே தெரியும். ஆனாலும் பாகிஸ்தான் அரசிடம் இருந்து தகவல் வர வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம். சயீத் பற்றிய உறுதியான ஆதாரங்கள் பாகிஸ்தானிடம் கேட்டிருக்கிறோம். அந்த தகவல்களை வைத்தே சயீத்தை கோர்ட்டில் நிறுத்தி தண்டனை பெற்று தர முடியும். அமெரிக்காவில் உள்ள கோர்ட்டிலோ, அல்லது வெளிநாட்டு கோர்ட்டிலோ அவன் நிறுத்தப்பட்டு தண்டனை உறுதியாக வாங்கித் தர முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்