முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சினிமாவுக்கு இசையமைக்க அனுபவம் தேவை பாடகர் பென்னிதயாள் பேச்சு

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 6 - பிரபல திரைப்பட பின்னணி பாடகர் பென்னிதயாள் முதல்முறையாக வாழ்க்கை டி.ஜே என்ற இசை பாடல் ஆல்பத்தை உருவாக்கி உள்ளார். இதன் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது:- சில ஆண்டுகளுக்கு முன்பு வெளிநாடு சென்றுயிருந்த போது நம் வாழ்க்கை சார்ந்த விஷயங்களை இசை வடிவத்தில் பாடலாக தொகுத்து ஆல்பம் தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதன் படி நான் சினிமாவில் பாடவந்த பிறகு இந்த ஆசை நிறைவேறியிருக்கிறது. சக்கரகட்டி, 7ம் அறிவு, மங்காத்தா, விண்ணைத்தாண்டி வருவாயா என பல படங்களில் எனது பாடல் பிரபலமானது தொடர்ந்து 50 க்கும் மேலான பாடல்கள் பாடியிருக்கிறேன். இந்த வாழ்க்கை டி.ஜே என்ற ஆல்பத்தில் 6 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. வீட்டில் இருக்கும் போது என்ன மனநிலை, அடுத்து டான்ஸ் மூவ் மெண்ட் பற்றி வாலிபம் இப்படி பல ட்ராக்கில் பாடல்கள் எல்லேரும் ரசிக்கும் படி உருவாகி உள்ளது. குறிப்பாக அன்றே செய்யாதே இன்றே செய், நான் மட்டும், அழகிய தமிழ் போன்ற பாடல்கள் பேசப்படும். இந்த ஆல்பத்துக்கு  கிரிஸ்டோ பர் பிரதீப் பாடல்கள் எழுதியிருக்கிறார். இசை ஜார்லஸ் பாஸ்கோ அவருடன் நானும் சேர்ந்து இசையமைத்திருக்கிறேன். ஆல்பத்திற்கு இசையமைத்திருப்பதால் சினிமாவுக்கு இசையமைப்பீர்களா என்று கேட்கிறார்கள். சினிமாவுக்கு இசையமைக்க அனுபவம்தேவை அது இப்போதைக்கு எனக்கு இல்லை இவ்வாறு அவர் கூறினார். பின்னர் ஆல்பம் வெளியிடப்பட்டது. பென்னிதயாள் வெளியிட ஆல்பத்தின் இசையமைப்பாளர் மற்றும் பாடலாசிரியர் என பலர் பெற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்