முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜே.பி.ஜே. குழும சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 6 - ஜே.பி.ஜே. குழும சொத்துக்களை பறிமுதல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஜே.பி.ஜே. குழுமம்  சுற்றுலா, நிதி வளாகம், ஹோட்டல் உள்பட 10 நிறுவனங்களை நடத்தி வருகிறது. இந்த குழுமத்தின் ரியல் எஸ்டேட் நிறுவனம் குறைந்த விலையில் வீடுகள் கட்டித் தருவதாக விளம்பரம் செய்திருந்தது. குறைந்த விலைக்கு வீடு கட்டித்தருவதாக கூறியதால் என்பதால் 4000 ஆயிரம் பேர் இந்த நிறுவனத்தில் வீட்டுக்காக பதிவு செய்தனர். இந்நிறுவனம் மோசடி செய்ததாக பின்னர் அறிய வந்த மக்கள் ஜே.பி.ஜே. நிறுவனத்துக்கு எதிராக வழக்கு பதிவு செய்தனர்.  அதில் 4000 பேரிடம் சுமார் ரூ.1000 கோடி மோசடி செய்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஜே.பி.ஜே. குழும நிறுவனர் தேவராஜ் மற்றும் அவரது மனைவியும் 2009​ம் ஆண்டு கைது செய்யப்பட்டனர். எனினும் இவர்கள் மீது குற்றப்பத்திகை ஏதும் இன்று வரை தாக்கல் செய்யப்படவில்லை. இவ்வழக்கு   சென்னை உயர்nullநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது குறித்து nullநீதிபதி நாகமுத்து கேள்வி எழுப்பினார். புகார் செய்த 4 ஆயிரம் பேரில் 3500 பேரிடம் விசாரணை நடத்தப்படவில்லை என போலீசார் தரப்பில் கூறப்பட்டது. இந்த விவாதங்களை கேட்ட nullநீதிபதி கூறியதாவது: ஜே.பி.ஜே. குழுமத்தின் சொத்துக்களை உடனே பறிமுதல் செய்ய வேண்டும். மோசடி வழக்கை விரைந்து முடித்து குற்றப்பத்திரிகையை nullநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். சொத்துக்கள் பறிமுதல் செய்து அந்த விவரத்தையும் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்