முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வாகன நிறுத்தத்தில் புதியமுறை: சென்னை விமான நிலையத்தில் குழப்பம்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப். - 6 - சென்னை விமான நிலையத்தில் வாகனங்களை நிறுத்துவதில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நடைமுறை காரணமாக பெரும் குழப்பமும், மோதல் நிலையும் ஏற்பட்டது. சென்னை விமான நிலையத்திற்கு வரும் வாகனங்களை முறைப்படுத்துவதற்காக புதிய தட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி பயணிகளை இறக்கி விடவோ அல்லது ஏற்றிச் செல்வதற்கோ வரும் வாகனங்கள் உள்ளே நுழையும் போது ஒரு ஸ்லிப் கொடுக்கப்படும். அதில் அந்த வாகனம் உள்ளே செல்லும் நேரம் குறிக்கப்பட்டிருக்கும். ஐந்து நிமிட நேரத்திற்குள் பயணிகளை இறக்கி விட்டோ அல்லது ஏற்றிக் கொண்டோ அந்த வாகனம் வெளியே வந்து விட வேண்டும். ஐந்து நிமிடத்திற்கு மேல் தாமதமானால் 60 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என்று புதிய நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஒரே நேரத்தில் 3 முதல் 5 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் தரையிறங்குகின்றன. சுமார் 700 பயணிகள் விமானத்தை விட்டு வெளியே வருகிறார்கள். அவர்களை ஏற்றிக் கொண்டு ஐந்து நிமிடத்திற்குள் வெளியே செல்வது என்பது கடினம். இதனால் வாகனங்கள் வெளியே வருவதில் சற்று தாமதம் ஏற்படுகிறது.

மேலும் வெளியே செல்லும் பாதையில் ஏராளமான வாகனங்கள் காத்திருப்பதால் 20 முதல் 30 நிமிட நேரம் வரை காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு அந்த வாகன ஓட்டிகள் காரணமில்லை. அப்படியிருக்கும் போது 60 ரூபாய் அபராதம் போல் கட்ட வேண்டும் என்று கூறுவதை ஏற்க முடியவில்லை. இதனால் வாகன ஓட்டிகளுக்கும், கட்டணம் வசூலிப்பவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு காரசார வாக்குவாதம் நடைபெறுதை காண முடிந்தது.நாங்கள் அந்த கட்டணத்தை செலுத்த முடியாது என்றும் பலர் வாதிடுகிறார்கள். இதனிடையே இந்த அபராத கட்டணத்திலிருந்து தப்புவதற்காக பல வாகன ஓட்டிகள் தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்தினார்கள். அவர்களை போலீசார் அங்கிருந்து விரட்டினார்கள். மேலும் கட்டணத்தை வசூலிப்பதற்காக ஆங்காங்கே ஐந்து, ஆறு nullத்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக நடந்து கூட செல்ல முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களுக்கும், ஒப்பந்தகாரர்களுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. போலீசார் தலையிட்டு அவர்களை சமாதானம் செய்தனர். விமானநிலையத்தில் பரபரப்பு. சென்னை விமான நிலையத்திலிருந்து ஒரே நேரத்தில் 3 விமானங்கள் புறப்படுவதற்கு தயாராக இருந்த நேரம் 2 விமானங்கள் தரையிறங்குவதற்கு வந்ததால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. .விமான நிலையம் எதிரே உள்ள மேம்பாலச் சாலையில் சென்ற பொது மக்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு கூட்டமாக நின்று இந்த காட்சியை வேடிக்கை பார்த்தனர். நேற்று காலை டெல்லி செல்லும் ஏர்இந்தியா விமானம், அந்தமான் செல்லும் கிங்பிஷர் விமானம் மற்றும் பெங்களூர் செல்லும் தனியார் விமானம் ஆகிய 3 விமானங்களும் புறப் படுவதற்கு தயாராக ரன்வேயில் அணிவகுத்து நின்றன.  அப்போது துபாயிலிருந்து வந்த சவுதி ஏர்வேஸ் விமானம் டெல்லியிலிருந்து வந்த ஏர்இந்தியா விமானம் தரையிறங்குவதற்கு தயார் நிலையில் வந்தன. உடனே விமான நிலைய கட்டுப்பாட்டு அறையிலிருந்து புறப்பட வேண்டிய 3 விமானங்களையும் தாமதமாக  புறப்படுமாறு அறிவுறுத்தியதுடன் வானில் வட்டமிட்ட 2 விமானங்களையும் பத்திரமாக தரையிறக்க அனுமதித்தனர். அந்த விமானங்கள் பத்திரமாக தரையிறங்கியதும் ரன்வேயில் அணிவகுத்து நின்ற 3 விமானங்களும் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டுச் சென்றன. இந்த காட்சியை விமானம் நிலையம் எதிர்புறம் உள்ள மேம்பாலச் சாலையிலிருந்து ஏராளமான பொது மக்கள் கூட்டம் கூட்டமாக நின்று கண்டுகளித்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்