தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையத்துறையில் உள்ள 'நிர்வாக அதிகாரி (நிலை -III)' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, மார்ச்.26 - அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் வாக்காளர்களுக்கு இலவச பொருட்களை கொடுப்பதாக அறிவிப்பது விதி மீறல் அல்ல, இது அந்தந்த கட்சியின் தேர்தல் திட்டமாகும். எனவே. இது தேர்தல் விதிமீறல் அல்ல என்று பிரவீன்குமார் கூறினார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் சி.டி. மற்றும் போஸ்டர்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நேற்று வெளியிட்டார். அதை கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி அமுதா, ராஜேந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
அந்த சி.டி.யில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம், நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜெயம்ரவி, இசை அமைப்பளார் விஜய் ஆண்டனி, நடிகைகள் சுகாசினி, ரோகிணி, முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீகாந்த் ஆகியோர் ஓட்டு போடுவது ஜனநாயக கடமை என்று சொல்லும் வகையில் இந்த சி.டி. அமைந்துள்ளது.
இதேபோல் தேர்தல் கமிஷன் சார்பில் வெளியிடப்பட்டுள்ள போஸ்டர்களில் மக்களாட்சிக்கு வாக்களிப்போம், மனசாட்சிக்கு வாக்களிப்போம், உங்கள்வாக்கு, உங்கள் எதிர்காலம், nullநீங்கள் விரும்பும் மாற்றம் உங்களிடம் இருந்து தொடங்கும் விலை மதிப்புள்ள உங்கள் வாக்கை பணத்திற்காக விற்பது என்பது போன்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளது.
இதுகுறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் நிருபர் களிடம் கூறியதாவது: அனைவரும் ஓட்டு போட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த சி.டி., போஸ்டர்கள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சிகள், திரையரங்குகள், பொது இடங்களில் ஒளிபரப்படும். போஸ்டர்கள் முக்கிய இடங்களில் ஒட்டப்படும்.
தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். தகுதி உள்ள அனைவரும் ஓட்டு போட வேண்டும். புகைப்படங்கள் அடங்கிய nullத் சிலிப், தேர்தலுக்கு 10 நாட்களுக்கு முன்பே கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 51 ஆயிரம் வாக்குச் சாவடி ஊழியர்கள் இதை விநியோகம் செய்வார்கள். யாருக்காவது nullத் சிலிப் கிடைக்காவிட்டால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் சொல்லி பெற்றுக் கொள்ளலாம். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சீபுரம், மதுரை ஆகிய இடங்களில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு வாக்காளர் பட்டியலில் புகைப்படம் இடம் பெறவில்லை. இவர்கள் ஏற்கனவே தேர்தல் கமிஷன் அனுமதித்த 13 விதமான புகைப்பட சான்றிழ்களில் ஏதாவது ஒன்றை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து ஓட்டு போட வேண்டும். மற்றவர்கள் புகைப்படத்துடன் கூடிய nullத் சிலிப்பை கொண்டே ஓட்டு போடலாம். கிராமங்களில் கிராம அதிகாரிகள் மூலம் nullத் சிலிப் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை 48 ஆயிரத்து 356 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 103 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. வாகன சோதனையில் ரூ.20 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.7 கோடி மதிப்புள்ள பொருட்கள் திரும்ப கொடுக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில்தான் அதிகபட்சமாக ரூ.3.8 கோடி பணம் பறிமுதல் ஆகி இருக்கிறது. சிறிய அளவிலான தொகை விசாரணைக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. பெரிய அளவிலான ரொக்கப்பணம் வருமானவரி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகிறது. சோதனை தொடர்பாக கோர்ட்டுக்கு தேர்தல் கமிஷன் 28ந்தேதி விளக்கம் அளிக்கும். தற்போது தேர்தல் கமிஷனுக்கு வரும் புகார்கள் குறைந்து விட்டது. ஏப்ரல் 11ந்தேதி முதல் 13ந்தேதி வரை தேர்தல் கருத்து கணிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4ந்தேதி முதல் மே 10ந்தேதி வரை வாக்காளர்கள் யாருக்கு ஓட்டு போட்டார்கள் என்பதை கேட்கும் கருத்துகணிப்பு வெளியிடக் கூடாது.
அரசியல் கட்சிகள் இலவச பொருட்கள் கொடுப்பதாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது. அவற்றை வழங்குவதாக பிரச்சாரமும் செய்து வருகின்றனர். இது அந்தந்த கட்சிகளின் தேர்தல் திட்டம். எனவே இது தேர்தல் விதிமீறல் அல்ல. அது அந்த கட்சியின் வாக்குறுதி. எனவே இதை செய்வோம் என்று கூறி ஓட்டு கேட்கலாம். அரசு சார்பில் ஏதாவது செய்தால்தான் விதிமீறல் ஆகும். அரசியல் கட்சிகள் கொடுக்கும் வாக்குறுதிகளை செயல்படுத்த முடியுமா? என்பதை மக்கள்தான் எண்ணிப் பார்க்க வேண்டும்.
பிரச்சாரம் தொடர்பான செய்திகளை தொலைக்காட்சி, பத்திரிகைகள் வெளியிடலாம். விளம்பரங்களை தேர்தல் கமிஷன் அனுமதி பெற்றுதான் வெளியிட வேண்டும். தனிப்பட்ட முறையில் யாரையும் விமர்சனம் செய்யக்கூடாது. இதுவரை 1,509 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார். அதன்பிறகு அவரிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: சிலர் தனிப்பட்ட முறையில் மாற்று கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கிறார்களே? பதில்: இதுபற்றிய புகாரை 24 மணி நேரத்திற்குள் ஆதாரத்துடன் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.
கேள்வி: ம.தி.முக. பொதுச் செயலாளர் வைகோ தங்கள் கட்சியை தேர்தலில் நிற்க விடாமல் தடுக்க பெருமளவில் பணம் கைமாறி இருப்பதாக குற்றச்சாட்டு கூறி இருக்கிறாரே?
பதில்: இதுகுறித்து எந்தப் புகாரும் தேர்தல் கமிஷனுக்கு வரவில்லை.
இவ்வாறு பிரவீன்குமார் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
டி-20 உலக கோப்பை : இந்திய அணியில் அஸ்வினை சேர்க்க வேண்டும் - கவாஸ்கர்
24 May 2022மும்பை : பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சாதித்து வரும் அஸ்வினை 20 ஓவர் உலக கோப்பை அணியில் சேர்க்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர்
-
இந்த ஆண்டு ஐ.பி.எல் தொடரின் சிறந்த கேப்டன் ஹர்திக் பாண்டியா : வீரேந்திர சேவாக் புகழாரம்
24 May 2022மும்பை : பேட்டிங் செய்யும்போது காட்டும் அதே ஆக்ரோஷத்தை, கேப்டனாகவும் காட்டுவார் என்று நினைத்தேன்.
-
10-ம் வகுப்பு கணிதத்தேர்வை எழுதாத 45,618 மாணவர்கள் : தமிழக தேர்வுத்துறை தகவல்
24 May 2022சென்னை : நேற்று நடைபெற்ற தேர்வில் 45,618 மாணவர்கள் தேர்வு எழுத வரவில்லை என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
விராட் கோலி, ரோகித் சர்மா மீண்டும் ரன்களை குவிக்க தொடங்குவார்கள் : பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி நம்பிக்கை
24 May 2022மும்பை : விராட் கோலி மற்றும் ரோகித் இருவர் குறித்தும் கங்குலி பேசுகையில், "அவர்கள் மிகச் சிறந்த வீரர்கள்.
-
ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுகிறோம் : முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கருத்து
24 May 2022மும்பை : சுரேஷ் ரெய்னாவின் பங்களிப்பை நாம் மறந்து விடுவதாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
-
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடர்: பல இளம் வீரர்களுக்கு வாய்பளிக்க தவானை தேர்வு செய்யாத டிராவிட்
24 May 2022மும்பை : தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 தொடரில் தவான் தேர்வு செய்யப்படாதது பயிற்சியாளர் ராகுல் டிராவிட் எடுத்த முடிவு என தெரியவந்துள்ளது.
-
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சற்று அதிகரிப்பு
24 May 2022சென்னை : தமிழகத்தில் நேற்று 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
-
அடுத்த ஐ.பி.எல்-லில் இருப்பேன்: ஆர்சிபி ஜாம்பவான் டிவில்லியர்ஸ்
24 May 2022தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான டிவில்லியர்ஸ், மொத்தம் 184 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி உள்ளார்.
-
பகை உணர்வு எதுவும் இல்லை ; மேரிகோமை மன்னித்துவிட்டேன் : தங்கம் வென்ற நிகத் ஐரீன் பேட்டி
24 May 2022மும்பை : மேரி கோம்மை மன்னித்துவிட்டதாக உலக சாம்பியன்ஷிப் குத்துச் சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற நிகத் ஐரீன் தெரிவித்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 25-05-2022
25 May 2022 -
ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவிடம் முதல்வர் ஸ்டாலின் நேரில் நலம் விசாரிப்பு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை, ஓமந்தூரார் அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவி சிந்துவை நேரில் சந்தித்து நலம் வ
-
சென்னையில் வரும் 3-ம் தேதி மாவட்ட செயலாளர்கள் கூட்டம் : தே.மு.தி.க. அறிவிப்பு
25 May 2022சென்னை : சென்னையில் வரும் 3-ம் தேதி தே.மு.தி.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை
25 May 2022பியாங்கியாங் : அமெரிக்கா அதிபர் ஜோ பைடன், ஜப்பானில் நடந்த குவாட் அமைப்பு உச்சி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு தனது நாட்டுக்கு புறப்பட்ட சில மணி நேரத்தில் வடகொரியா ஏவுகணை ச
-
கொலை முயற்சியில் உயிர் தப்பிய புடின் : உக்ரைன் அதிகாரி திடுக்கிடும் தகவல்
25 May 2022கீவ் : ரஷ்ய அதிபர் புடினை கொல்ல இரண்டு மாதங்களுக்கு முன் முயற்சி நடந்ததாகவும், அதில் அவர் தப்பித்ததாகவும் உக்ரைன் ராணுவ உளவுப்பிரிவு தலைவர் தெரிவித்துள்ளார்.
-
நாசா வெளியிட்ட கேலக்ஸியின் புதிய புகைப்படம் வைரல்
25 May 2022நியூயார்க் : நாசா விண்வெளி ஆய்வு மையம் கேலக்ஸியின் புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளது.
-
நிதித்துறை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்பு
25 May 2022கொழும்பு : இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூடுதல் பொறுப்பாக நிதித்துறை அமைச்சராக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
-
உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு
25 May 2022லண்டன் : உலக சுகாதார அமைப்பின் தலைவராக டெட்ரோஸ் அதனோம் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு: பலியானோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு : முற்றுப்புள்ளி வைப்பது எப்போது என பைடன் ஆதங்கம்
25 May 2022டெல்சாஸ் : அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்து வருகிறது.
-
இந்து கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். வேண்டுகோள்
25 May 2022சென்னை : இந்து கடவுள்களை இழிவுபடுத்திப் பேசுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு அ.தி.மு.க.
-
மேட்டூர் அணை நீர்வரத்து 8,539 கன அடியாக சரிவு
25 May 2022சேலம் : மேட்டூர் அணையின் நீர்வரத்து நேற்று 8,539 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 117.92 அடியாக உள்ளது.
-
பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேரில் ஆய்வு செய்தார்
25 May 2022சென்னை : பெருநகர சென்னை மாநகராட்சி மடுவண்கரை, கிண்டி மற்றும் ஆலந்தூர் (எம்.கே.என்.நகர்) பகுதிகளில் உள்ள மழைநீர் வடிகால்வாய்களை அமைச்சர் எ.வ.வேலு நேற்று நேரில் ஆய்வு செய
-
கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் : குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை விளக்கம்
25 May 2022சென்னை : கடந்த 3 ஆண்டுகளில் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் 20,100 குவிண்டால் ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குடிமைப்பொருள் குற்றப்புலனாய்வு துறை தெரிவித்துள்ளது
-
சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.25.66 கோடி வங்கிக் கடன் இணைப்புகள்: மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா : முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க.
-
கிண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு : அரசு சேவைகள் தொய்வின்றி வழங்க உத்தரவு
25 May 2022சென்னை : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கிண்டி, வட்டாட்சியர் அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
-
அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
25 May 2022சென்னை : தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதனின் தாயார் மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.