முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை நீதிபதி வினோத்சர்மா திறந்துவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

அருப்புக்கோட்டை ஏப்ரல் - 07 - அருப்புக்கோட்டையில் 4 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சட்ட அமைச்சர் சண்முகம் தலைமையில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார்.  அருப்புக்கோட்டையில் சார்பு நீதிமன்றம் பட்டாபிராமர் கோவில் தெருவிலும், முன்சீப் கோர்ட் பிள்ளைமார் தெருவிலும், குற்றவியல் நீதிமன்றம் பந்தல்குடி சாலை தாலுகா அலுவலக வளாகத்தில் தனி தனியாக செயல்பட்டு வந்தது.  இதனால் பொதுமக்கள் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் செல்லும் போது அங்கும் இங்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது.  நீதிபதிகளுக்கு குடியிருப்புகள் இல்லாமல் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர்.  அதை தொடர்ந்து அருப்புக்கோட்டை பொதுமக்கள். வழக்கறிஞர்கள். வர்த்தக அமைப்புகள் போன்ற பொதுநல அமைப்புகள் சார்பாக ஒருங்கிணைந்த நிதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.  அதன் கீழ் அரசு உத்தரவின் படி மதுரை சாலை கால்நடை மருத்துவமனை அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டது.  அதை தொடர்ந்து ஒருங்கிணைந்த நீதிமன்றம் கட்ட அரசு சுமார் 4 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.  அதை தொடர்ந்து மூன்று நீதிமன்றங்கள், மூன்று நீதிபதிகள் குடியிருப்புகள், கைதிகள் அறை, நூலகம், வங்கி, வழக்கறிஞர்கள் அறை, நீதிபதிகள், ஊனமுற்றோருக்கு தனித் தனியாக லிப்ட் வசதிகள் மற்றும் பல வசதிகளுடன் அதி நவீன ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்டப்பட்டது.  புதியதாக சுமார் 4 கோடி செலவில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்தார்.  அதன் பின் திறப்பு விழா நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட எம்.எஸ்.மஹாலில் நடைபெற்றது.  விழாவிற்கு சட்ட அமைச்சர் சண்முகம் தலைமை வகித்தார். உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேவதாஸ், விஐயராகவன், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி, மாவட்ட ஆட்சியர் பாலாஜி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.  விருதுநகர் மாவட்ட நீதிபதி கிருஷ்;ணமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார். சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வினோத் சர்மா திறந்து வைத்து பேசினார்.  விழாவில் சட்ட அமைச்சர் சண்முகம் பேசியதாவது தமிழக முதல்வர் அம்மா ஆட்சியில் ஒரு மாதத்தில் மூன்று நீதிமன்ற வளாகம் திறப்பு விழா நடைபெற்றுள்ளது.  இந்த நீதிமன்ற கட்டிடம், கட்டிடப் பணிகள் நிதி பற்றாக்குறையால் தடைபட்டு இருந்தது.  முதலமைச்சர் கூடுதல் நிதி ஒதுக்கி கட்ட உத்தரவிட்டுள்ளார். அதை தொடர்ந்து கூடுதல் நிதியால் நீதிமன்ற கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  முதலமைச்சர் ஆட்சியல் நீதி துறை சுதந்திரமாக செயல்பட வேண்டும்.  சட்டம் தன் கடமையை செய்ய வேண்டும்.  ஒரு விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் கூறியுள்ளனர்.  இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் நீதி துறைக்கு நல்ல கட்டிடங்கள் அடிப்படை வசதிகள் நல்ல முறையில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.  பெரும்பான்மையான நீதிமன்ற கட்டிடங்கள் சொந்த கட்டிடங்களாகவே உள்ளது.  நமது முதலமைச்சர் அவர்கள் நீதிதுறைக்கு தனி மரியாதை கொடுத்துள்ளார்.  நீதித் துறையில் அமைச்சர்கள், எம்.ஏல்.ஏ யாரும் தலையிடக் கூடாது என்று கூறியுள்ளார்.  முன்பு உயர்நீதிமன்றம் சென்னையில் மட்டும் தான் இருந்தது.  கன்னியாகுமரி மற்றும் தென் மாநிலத்திலிருந்து உயர் நீதிமன்றம் செல்ல வேண்டும் என்றால் சென்னைக்குத் தான் செல்ல வேண்டும்.  இதனால் பொதுமக்களுக்கு பண வரையம், கால வரையம் ஏற்பட்டது.  கடந்த அம்மா ஆட்சியில் தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று மதுரையில் 88 கோடி செலவில் உயர்நீதி மன்ற கிளை துவங்கப்பட்டது.  தற்போது தமிழகத்தில் 49 விரைவு நீதிமன்றங்கள் உள்ளன.  இதை நிரந்தரமாக்கப்பட வேண்டும், நிரந்தர மாவட்ட நீதிபதிகளாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.  அதையும் உடனடியாக முதலமைச்சர் அவர்கள் 49 விரைவு நீதிமன்றங்கள் செயல்பட நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளார்.  இந்தியாவிலேயே தமிழகம் தான் நீதி துறையில் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது.  நில அபகரிப்புகளை விசாரிப்பதற்காக தனியாக நில அபகரிப்பு கோர்ட்டுகள் அமைக்கப்பட உள்ளன.  இதன் மூலம் குற்றங்கள் வெகுவாக குறைந்துள்ளது.  பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைத்து வருகிறது.  25 விரைவு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளது.  இதற்கு சென்னை உயர்நீதி மன்றம் நீதிபதிகள் நீதிபதிகளை நியமிக்க வேண்டும்.  நீதித் துறையின் மூலம் எந்தெந்த கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளதோ அதை அனைத்தையும் அம்மா அரசு நிறைவேற்றியுள்ளது.  ஆவன காப்பகம் வேண்டுமென்று கூறியுள்ளதை ஏற்று அரசு ஆணை ஆவணக் கோப்பில் கையெழுத்திட்டுள்ளார்.  மேலும் நீதிமன்றம் மூலம் அனுப்பப்படும் கோரிக்கைகளை உடனடியாக முதல்வரிடம் எடுத்துச் சொல்லி நிறைவேற்றுவோம் என்றார்.  

விழாவில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் விஜயராகவன், தேவதாஸ், கூடுதல் மாவட்ட நீதிபதி பரமராஜ், மாவட்ட ஆட்சியாளர் பாலாஜி, பார் கவுன்சிலர் உறுப்பினர் இராஜராஜன், அருப்புக்கோட்டை பார் கவுன்சிலர் தலைவர் செல்லையா, செயலாளர் செல்வராஜ் மற்றும் பலர் பேசினர்.  விருதுநகர் மாவட்டம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பாக நீதிபதிகளுக்கு சால்வை அணிவித்தனர்.  விழாவில் அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ஜெசீந்திரா மார்டின,; குற்றவியல் நீதிபதி கணபதி சாமி, முன்சீப் நீதிபதி மகாலட்சுமி, விருதுநகர் சார்பு நீதிபதி லியாகத் அலிகான், குற்றவியல் நீதிபதி சசிரேகா, முன்சீப் நீதிபதி அமிர்தவேல், சாத்தூர் முன்சீப் நீதிபதி முத்துக்குமார், குற்றவியல் நீதிபதி சுபத்திரா, ஸ்ரீவில்லிபுத்தூர் விரைவு நீதிமன்ற நீதிபதி செல்லத்துறை, முன்சீப் நீதிபதி சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி மேகலா மைதிலி, சிவகாசி சார்பு நீதிபதி சுமதி, குற்றவியல் நீதிபதி சம்பத் குமார், முன்சீப் நீதிபதி ஜெயசுதா, இராஜபாளையம் குற்றவியல் நீதிபதி அனில்குமார், அருப்புக்கோட்டை ஆர்.டி.ஓ அருமைநாயகம் வரகுணராஜ், நாடார் உறவின் முறைத் தலைவர் மனோகரன், ஜெயவிலாஜ் தொழிலதிபர் தினகரன், பஸ் உரிமையாளர் மகாலிங்கம், மின்செயற் பொறியாளர்கள் பாலசுப்பிரமணியம், லதா, எஸ்.எஸ்.கே தொழிலதிபர் சங்கரலிங்கம் மற்றும் நீதிதுறையைச் சேர்ந்த அலுவலர்கள், வழக்கறிஞர்கள், கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago