Idhayam Matrimony

போடியில் மின்விசிறி,மிக்சி, கிரைண்டர், மடிக்கணினி, ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

தேனி,ஏப்.- 8 - தமிழக முதல்வர் ஏழை,எளிய வாழும் மக்களுக்கு குடும்ப கார்டு உள்ள அனைவருக்கும் விலையில்லா மின்விசிறி,மிக்சி,கிரைண்டர்,பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு இலவசமாக மடிகணினி வழங்கும் திட்டம் நிறைவேற்றினார்.திட்டபடி  நாயக்கனூர்,புலிக்குத்தி,உப்பார்பட்டி,தாடிச்சேரி,ஆகிய ஊர்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு வழங்க வேண்டும் தமிழக முதல்வர் வேண்டுகோளை ஏற்று போடிநாயக்கனூர் ஏல விவசாய சங்க கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகள் 319 பேர்களுக்கு ரூ.44,89,000 மதிப்புள்ள போடி ஏல விவசாய சங்க கல்லூரி வளாகத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு வந்தவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் வரவேற்றார். முன்னதாக கல்லூரி தலைவர் சுப்பையா,செயலாளர் ஸ்ரீதர்,கல்லூரி முதல்வர் ராஜராஜன் ஆகியோர் நிதி அமைச்சரை பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். விழாவில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ தங்கதமிழ்செல்வன்,மாவட்ட செயலாளர் கம்பம் நகர்மன்ற தலைவருமான சிவக்குமார்,முன்னாள் எம்.பி.சையதுகான்,உத்தமபாளையம் ஹாஜி கருத்தராவுத்தர் கல்லூரி தலைவர் போடிநகர்மன்ற தலைவர் பழனிராஜ்,ஊராட்சி ஒன்றியகுழு தலைவர் சித்ராதேவி,ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ ,கலந்து கொண்டு பேசியதாவது:11 ஆண்டு காலத்தில் தமிழக முதல்வராக மூன்று முறை முதல்வராக பதவி ஏற்று ஏழை,எளிய,மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் நிறைவேற்றி வழங்கி உள்ளார்.இந்தியாவில் யாருமே நிறைவேற்றாத திட்டம் தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்கள் நிறைவேற்றியுள்ளார். குறிப்பாக ரேசன்கார்டுகள் அனைத்துக்கும் இலவச அரிசி வழங்கப்படுகிறது.தமிழக முதல்வர் எந்த திட்டம் நிறைவேற்றினாலும் மக்கள் பயன்படும் வகையில் நிறைவேற்றி வருகிறார்.இப்பகுதியில் வாழும் ஏழை,எளிய மாணவ,மாணவிகள் பொறியியல் கல்லூரியில் பயில மற்ற மாவட்டங்களுக்கு சென்று படிக்க பண வசதி தேவைப்படுகிறது.இதனை தமிழக முதல்வர் போடிநாயக்கனூரில் பொறியியல் கல்லூரி அமைக்க ரூ.94 கோடி மதிப்பில் நிதி வழங்கியுள்ளார்.வரும் ஆண்டு முதல் கல்லூரி செயல்பட அனுமதியும் வழங்கியுள்ளார்.அதற்கு இப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.2003-ஆம் ஆண்டில் கணினி பாடத்தில் தமிழகம் முதல் மையமாக வர தொலைநோக்கு திட்டம் தயார் செய்துள்ளார்.தொழில் நுட்ப துறையில் மொழிபிரச்சனை வராமல் இருக்க மொழி கற்று தர 10 பல்கலைகழகங்களில் இலவசமாக  மொழி கற்று கொள்ள நிதியும் ஒதுக்கியுள்ளார்.இக்கல்லூரியில் பயிலும் மாணவ,மாணவிகள் 319 பேருக்கு மடிகணினி வழங்கினார்.அதன் பின் புலி குத்தி கிராமத்திற்கு சென்று மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் விலையில்லா பேன்,மிக்சி,கிரைண்டர்,வீட்டுமனைப்பட்டா,வழங்கும் விழா நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயராணி வரவேற்றார்.நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ரூ 39.19 லட்சம் மதிப்புள்ள விலையில்லா பேன்,மிக்சி,கிரைண்டர்,739 பேர்களுக்கு வழங்கினார்.ரூ.81.25 இலட்சம் பேர்களுக்கு இலவசமாக பட்டா வழங்கினார்.உப்பார்பட்டி கிராமத்தில் விலையில்லா பேன்,மிக்சி,கிரைண்டர்,வீட்டு மனைபட்டா வழங்க வருகை தந்த நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. அவர்களை மாவட்ட விவசாய அணி செயலாளர் வரதராஜன் ,முன்னாள் எம்.எல்.ஏ.ஜி.பொன்னுப்பிள்ளை,உப்பார்பட்டி ஊராட்சி தலைவர் ஆகியோர் வானவெடிகள் விட்டு மேளதாளத்துடன் வரவேற்றார்.வரவேற்பை ஏற்று கொண்டு ரூ.50.44 இலட்சம் மதிப்புள்ள பேன்,மிக்சி,கிரைண்டர்,739 பேர்களுக்கு வழங்கினார்.ரூ.19.95 லட்சம் மதிப்புள்ள வீட்டு மனைபட்டா 154 பேர்களுக்கு இலவசமாக வழங்கினார்.இவ்விழா டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட வருவாய் அலுவளர் விஜயராணி வரவேற்றார்.தாடிச்சேரி கிராமத்தில் விலையில்லா பேன்,மிக்சி,கிரைண்டர்,வீட்டுமனைப்பட்டா வழங்கும் விழா டாக்டர் கே.எஸ்.பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.விழாவிற்கு வந்தவர்களை மாவட்ட வருவாய் அலுவலர் விஜயராணி  வரவேற்றார்.விழாவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு விலையில்லா பேன்,மிக்சி,கிரைண்டர்,ரூ 73.82 இலட்சம் மதிப்உள்ள்ள பேன் ,மிக்சி,கிரைண்டர் 1367 பேர்களுக்கு வழங்கினார்.ரூ 45.50 இலட்சம் மதிப்புள்ள வீட்டுமனைப்பட்டா 336 பேர்களுக்கு இலவசமாக வழங்கினார்.நிகழ்ச்சியில் 20 பேர்களுக்கு தாலிக்கு தங்கம்,திருமண உதவி தொகை வழங்கினார்.
நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ ஆர்.டி.கணேசன்,மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  மகாலிங்கம்,துணைதலைவர் ஆண்டி,நகர செயலாளர்கள் கம்பம் நாகராஜ்,சின்னமனூர் சுரேஷ்,ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அம்ச கோமதி விப்ரநாராயணன்,பெரியகுளம் செல்லமுத்து,தேனி நகர்மன்ற தலைவர் முருகேசன் ,துணைத்தலைவர் காசிமாயன்,உறுப்பினர்கள் வக்கீல் கிருஷ்ணக்குமார்,வீரமணி,ஜெயமணி,ஆவின் சின்னச்சாமி,அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் பால்பாண்டி,முன்னாள் நகர செயலாளர் ராமராஜன்,முன்னாள் வாரியத்தலைவர் சதக்கத்துல்லா,உத்தமபாளையம் சப்-கலெக்டர் கண்ணன்,பெரியகுளம் சப்-கலெக்டர் தேனி தாசில்தார் ராஜேந்திரன்,சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் அபுதாகீர் ,பெரியகுளம் முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் சமது,உப்பார்பட்டி முருகன்,போஸ்,மற்றும் துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்