முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போடி பரமசிவன் மலைக்கோவிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      ஆன்மிகம்
Image Unavailable

 

போடி ஏப். - 8 - தேனி மாவட்டம், போடிநாயக்கனுனூரில் தென்திருவண்ணாமலை என்று அழைக்கக்கூடிய பரமசிவன் மலைத்திருக்கோவில் திருவிழா வரும் சித்திரை மாதம் 2-ம் தேதியான ஏப்ரல் 14-ம் தேதி துவங்க உள்ளது. இத்திருவிழாவினை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. போடி பரமசிவன் கோவில் அன்னதான அறக்கட்டளை தலைவர் இளைய ஜமீன்தார். வடமலைராஜைய பாண்டியர் தலைமையிலும், அணைக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமிசரவணன், முன்னிலையிலும் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டு சிறப்பு புஜைகள் செய்யப்பட்ட கொடிமரத்தினை பரமசிவன் கோவில் தலைமை அர்ச்சகர் சுந்தரம் ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றார். இந்த ஊர்வலம் பெரியாண்டவர் கோவிலில் இருந்து புறப்பட்டு போடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு பரமசிவன் மலைத்திருக்கோவிலை அடைந்தது. சிறப்பு புஜைகள் செய்யப்பட்ட கொடிமரம் மேளதாளம் முழங்க பரமசிவன் மலைத்திருக்கோவிலில் கொடியேற்றப்பட்டது. அப்போது கூடியிருந்த பக்தர்கள் சரணகோஷம் எழுப்பினார்கள். இந்நிகழ்ச்சியின் போது பரமசிவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு புஜைகள் நடைபெற்றது. அலங்காரம் மற்றும் சிறப்பு புஜைகளுக்கான ஏற்பாடுகளை பரமசிவன் கோவில் உதவி அர்ச்சகர்கள் சென்றாயன், குமார், முருகேசன், சிவமணிகண்டன், சீனிவாசன், முத்துராமலிங்கம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் சிங்காரவேலன் பழனிபாதயாத்திரை பேரவையின் குருநாதர் சுருளிவேல், தொழிலதிபர் முத்து, அ.இ.அ.தி.மு.க போடி நகர அவைத்தலைவர் கனல்.காந்தி, 1-வது வார்டு கவுன்சிலர் மகேந்திரன், முத்துராமலிங்கம், ஆறுமுகம், பேச்சிமுத்து, ஜெயபால் மற்றும் நகரின் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது சர்க்கரை பொங்கல் பிரசாதமும், அன்னதான நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்