முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொழிலாளர் இழப்பீடு சட்டத்தை எதிர்த்த வழக்கு தள்ளுபடி உயர்நீlதிமன்றம் தீர்ப்பு

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை:ஏப்.- 9 - தொழிலாளர் இழப்பீடு வழங்குவதை எதிர்த்து அப்பீல் வழக்கு தொடரும்போது இழப்பீட்டு தொகை முழுவதையும் முன்பணமாக வைக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர்nullநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வரும் பணியாளர் அந்த நிறுவனத்திடம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரும்போது அவருக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என்று தொழிலாளர் தீர்ப்பாயம் உத்தரவிடும். இந்த உத்தரவை எதிர்த்து சம்மந்தப்பட்ட நிறுவனம் அப்பீல் மனு தாக்கல் செய்தால் கீழ் nullநீதிமன்றம் வழங்கிய இழப்பீட்டுத் தொகை முழுவதையும் அப்பீல் செய்யப்படும் nullநீதிமன்றத்தில் முன் பணமாக இருப்பு வைக்க வேண்டும் என்று தொழிலாளர் இழப்பீடு சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த சட்டப் பிரிவை எதிர்த்து எட்வர்டு தாமஸ் என்பவர் உயர் nullநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு nullநீதிபதி கே.சந்துரு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த nullநீதிபதி அளித்த தீர்ப்பு வருமாறு: தொழிலாளர் இழப்பீடு சட்டம் கடந்த 1933ல் அமைக்கப்பட்டது. தொழிலாளருக்கு தரப்படும் இழப்பீட்டுத் தொகையை எதிர்த்து சம்மந்தப்பட்டவர் மேல் முறையீடு செய்யும்போது இழப்பீட்டுத் தொகை முழுவதையும் டெபாசிட் செய்ய வேண்டும் என்று கூறுவது அரசியலமைப்பு சட்டத்துக்கு முரணானதல்ல. இழப்பீடு தொகையை முன்பணமாக டெபாசிட் செய்ய வேண்டும் என்பதற்கும் பல காரணங்கள் உள்ளன. எனவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் nullநீதிபதி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago