முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பன்றிக்காய்ச்சல் பரிசோதனைக்கு தனியார் ஆய்வகங்கள் தமிழகஅரசு அனுமதி

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஏப்.- 9 - பன்றிக்காய்ச்சல் நோய்குறித்த பரிசோதனைகளுக்கும் தனியார் ஆய்வகங்களுக்கு தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. இதுக்குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- பன்றிக்காய்ச்சல் நோய் உள்ளதா என்பதை உறுதி செய்யும் ஆய்வக பரசோதனைகளை (ஆர்டி-பிசிஆர்) செய்திட தமிழக அரசு 12 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்த தனியார் ஆய்வக உரிமையாளர்களுடன் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர்.வி.எஸ்.விஜய் தலைமையில் நேற்று  8-4-2012 சென்னையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில், பொதுமக்களின் நலன்கருதி, இலாப நோக்கமின்றி பன்றிக்காய்ச்சல் நோய் கண்டறிய தரமான ஆய்வக பரிசோதனையான ஆர்.டி-பி.சி.ஆர் செய்வதற்கு ரூபாய் 5000 முதல் ரூ.7000 என்று இருந்த கட்டணத்தை குறைத்து ரூ.3000 மட்டுமே ஓரே சீரான முறையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தனியார்  ஆய்வகங்கள் மக்களிடம் கட்டணமாக பெறவேண்டும் என மக்கள்  நல்வாழ்த்துறை அமைச்சரால்  வேண்டுகோள் விடப்பட்டது. இதை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வக உரிமையாளர்களும் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர்.பன்றிக்காய்ச்சல் நோய்குறித்த பரிசோதனை விவரங்களை தினமும் அரசுக்கு உடனுக்குடன் தெரிவிக்க அனைத்து அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. மேலும், இந்த தனியார் ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை அரசின் கிங் நிலை. ஆய்வகத்தின் மூலமாக கரக்கட்டுப்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டு சரியான ஆய்வக பரிசோதனை மேற்கொள்ள கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பொது சுகாதாரத்துறை இயக்குநர் மரு.இரா.தி.பொற்காப்பாண்டியன், மருத்துவக்கல்வி இயக்குநர் மரு.வம்சதாரா கிண்டி கிங்  நிலைய இயக்குநர் மற்றும் மருத்துவத்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவ்வாறு தமிழக அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்