முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மகளிருக்கு 33 சதவிகித ஒதுக்கீடு கொண்டு வந்தது என் ஆட்சியே

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.10-​உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு 33 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டுவந்தது அதிமுக அரசு தான் என்று முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று சட்டசபையில் தெரிவித்தார். சட்டசபையில் நேற்று நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி, குடிநீnullர் வழங்கல் துறை மற்றும் ஊராட்சி துறைக்கான மானிய கோரிக்கைகளை உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.பி.முனுசாமி தாக்கல் செய்தார்.

இந்த மானிய கோரிக்கைகள் மீது நேற்று விவாதம் நடைபெற்றது. திமுக தரப்பில் பேசிய சக்கரபாணி, உள்ளாட்சி அமைப்புகளில் மகளிருக்கு அதிக வாய்ப்புகளை கொடுத்தது திமுக தலைவர் கருணாநிதி தலைமையிலான அரசு தான் என்று குறிப்பிட்டார்.

அப்போது, முதலமைச்சர் ஜெயலலிதா எழுந்து ஒரு விளக்கம் அளித்தார்.

1994ம் ஆண்டு தமது தலைமையிலான ஆட்சி தான் மகளிருக்கு உள்ளாட்சி அமைப்புகளில் 33 சதவிகித இட ஒதுக்கீடை கொண்டுவந்தது என்று அவர் கூறினார். திமுக உறுப்பினர் உண்மைக்கு மாறான தகவலை அவைக்கு தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். விவாதத்தின் போது குறிக்கிட்டு கே.பி.முனுசாமி விளக்கம் அளித்தார்.

சென்னை நகருடன் இணைக்கப்பட்டுள்ள புறநகர் பகுதிகளுக்கு விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று அவர் கூறினார். உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு விரைவில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் முனுசாமி அவையில் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்