முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டசபையில் மொபைல் போனுக்கு தடை: சபாநாயகர்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.10 - சட்டசபை வளாகத்திற்குள் மொபைல் போன் கொண்டு செல்ல சபாநாயகர் ஜெயக்குமார் நேற்று தடை விதித்தார். இதன் படி அனைத்து எம்.எல்.,ஏ.,க்கள் மற்றும் அலுவலர்கள், நிருபர்கள் மொபைல் போன் கொண்டு வரக்கூடாது. இந்த தடை இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதனை ஜெயக்குமார் சபையில் அறிவித்தார். கர்நாடகா, குஜராத் சட்டப்பேரவையில் உறுப்பினர்கள் செல்பேனில் ஆபாச படம் பார்த்த சர்ச்சையை தொடர்ந்து தமிழக சட்டப்பேரவைக்குள் நாளை (இன்று) முதல் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடகா சட்டப்பேரவைக்குள் மாநில அமைச்சர்கள் மூன்று பேர் செல்பேனில் ஆபாச படம் பார்த்தது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆபாச படம் பார்த்ததை தொடர்ந்து மூன்று அமைச்சர்களும் பதவியை இழந்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் குஜராத் மாநில சட்டப்பேரவையில் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் செல்போனில் ஆபாச படம் பார்த்ததும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.. அண்மையில் சட்டப்பேரவை நடவடிக்கைகளை செல்போன் மூலம் படம் பிடித்ததாக தே.மு.தி.க., தி.மு.க. உறுப்பினர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மொபைலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரவைத்தலைவர் ஜெயக்குமார் நேற்று சபையில் அறிவித்ததாவது:-

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 87 கூறு 10-ன்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மண்டபத்திற்குள் அமைச்சர்கள், சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் தங்களின் கைபேசியினை எடுத்து வரக்கூடாது எனத் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் கைபேசியை பத்திரமாக பேரவை மண்டபத்தின் வெளியிலே வைத்துவிட்டு பேரவையினுள் செல்வதற்கு வசதியாக புறாக் கூண்டு அறைகள் பிஜியான் ஹோல்ஸ் பூட்டு, சாவி வசதிகளுடன் பேரவையின் மேல்புறம் மற்றும் கீழ்புறத் தாழ்வாரங்களில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண்களைக் கொண்ட அறைகள் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. தங்களது இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள எண் கொண்ட புறாக் கூண்டு அறை சாவியினை நூலகப் பிரிவு 2-லிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் பி.எஸ்.என்.எல்.ஸ்மார்ட் பே.போன் கருவிகள் பேரவை மண்டபத்தின் மேல்புற மற்றும் கீழ்ப்புறத் தாழ்வாரங்கள், பப்ளிக் பிளாசா, சட்டமன்றப் பேரவை ஆண்கள் மற்றும் பெண்கள் உறுப்பினர்களின் ஓய்வறைகள், தி.மு.க. சட்டமன்ற கட்சி அறை, கம்யூனிஸ்ட் சட்டமன்ற கட்சி அறையின் நுழைவாயில் மற்றும் பேரவை மண்டபத்தின் பத்திரிகையாளர்கள் மேல் மாடம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒரு வருடக்காலம் செல்லத்தக்க வகையில் ரூ.100/- மதிப்பிலான ஸ்மார்ட்கார்ட் இலவசமாக இச்செயலகத்தால் வழங்கப்படும். அதில் ரூ.70/- வரை பேசிக்கொள்ளலாம். இவ்வசதியை தொடர்ந்து உபயோகப்படுத்த வேண்டுமாயின் உறுப்பினர்கள் தங்கள் சொந்த செலவில் ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டும். ரீசார்ஜ் செய்துகொள்ள வசதியாக பி.எஸ்.என்.எல் பணியாளர்கள் நூலகப் பிரிவு 2-ல் இருப்பார்கள். அவர்களிடம் தங்களது ஸ்மார்ட் கார்ட் அட்டைகளை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.

இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.​​

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago