முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தே.மு.தி.க. கூச்சல் குழப்பம்: சபையிலிருந்து வெளியேற்றம்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.10 - சட்டசபையில் நேற்று உள்ளாட்சி மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அ.தி.மு.க. உறுப்பினர் விஜயபாஸ்கர் பேசினார். அப்போது அவர் ஒரு கதை சொன்னார். அதன் விவரம் வருமாறு:-  ஒரு ஊரிலே பல கட்டிடங்கள் இருக்கிறது. சாலை ஓரத்தில் ஒரு பெரிய கட்டிடம் இருக்கிறது. அதன் அருகில் சிறிய சிறிய கட்டிடங்கள் வரிசையாக இருக்கின்றது. ஒரு சில கட்டிடம் கட்டியும், கட்டாமையும், பழையதும், புதியதும் கூடிய சிறிய கட்டிடங்களாகவும் உள்ளன. சாலை ஓரத்தில் ஒரு வழிபோக்கன் அந்த வழியாய் போய்கொண்டிருந்தான். அந்த உயரமான கம்பீரமான கட்டிடத்தின் கீழே ஒருவன் நின்றுக்கொண்டிருந்து, ஏதோ செய்துக் கொண்டிருக்கிறான். வழிப்போக்கன் அவனை கவனித்தபோது அந்த டிப்டாப் ஆசாமி சும்மா நிற்கவில்லை. ஏதோ ஒரு விசித்திரமான வேலையை செய்துக் கொண்டிருக்கிறான் என்று உணர்ந்ததால், அவர் என்னதான் செய்கிறான் என்று போய்தான் பார்ப்போமே என்று, டிப்டாப் ஆசாமியிடம் சென்றார். அந்த டிப்டாப் ஆசாமி கைலே ஒரு மரக்கம்பை வைத்துக்கொண்டு, கம்பின் ஒரு முனையை அந்த உயரமான கட்டிடத்தின் பக்கவாட்டின் சுவற்றிலும், இன்னொரு ஒரு முனையை தன் கையிலும் வைத்துக் கொண்டு  நாக்கை துருத்திக்கொண்டு, ஒரு விசித்திரமான செயலை செய்துக்கொண்டிருக்கிறான் என்று தெரிகிறது. 

அந்த டிப்டாப் ஆசாமியை பார்த்து வழிபோக்கன் தம்பி கையில் கம்பை வைத்துக்கொண்டு என்ன செய்கிறாய் என்று கேட்க, அந்த டிப்டாப் ஆசாமி தொந்தரவு செய்யாதிருங்கள் கட்டிடத்திற்கு முட்டுக்கொடுத்து, தாங்கி பிடித்து கொண்டிருக்கிறேன் என்று சீரியசாக சொன்னார். அப்போதுதான் அந்த வழிப்போக்கனுக்கு புரிந்தது, முட்டுக்கொடுத்து நின்ற டிப்டாப் ஆசாமி நிதானத்தில் இல்லை என்றும், தன்னிலை தடுமாறி உள்ளான் என்று புரிந்தது. 

தன்னாலே தரையில் ஊன்றி நிற்க முடியாமல் சிரமப்படுவர், முட்டுக்கொடுத்து தாங்கி பிடிப்பது வேடிக்கையாக இருக்கிறது.  யாரும் முட்டு கொடுத்ததால் அல்ல நாங்கள் விட்டுக் கொடுத்ததால் தான் 29 இடங்கள் அவர்களுக்கு கிடைத்தது என்று குறிப்பிட்டார். 

உடனே தே.மு.தி.க. எம்.எல். ஏ.க்கள் அனைவரும் எழுந்து நின்று உறுப்பினர்கள் சொன்ன கதை எங்கள் கட்சி தலைவரை குறிப்பிடுகிறது. எனவே அந்த கதையை அவை குறிப்பில் இருந்து nullக்க வேண்டும் என்றனர். ஆனால் சபாநாயகர் இது வெறும் கதை தான் யார் பெயரையும் குறிப்பிட வில்லை என்றார். ஆனால் தே.மு.தி.க. உறுப்பினர்கள் அ.தி.மு.க. உறுப்பினர் சொன்ன கதையை சபை குறிப்பில் இருந்து nullநீக்க வேண்டும் என்று தொடர்ந்து குரல் கொடுத்தனர். இதை தொடர்ந்து தே.மு.தி.க. உறுப்பினர்கள் அனைவரையும் சபையில் இருந்து வெளியேற்றுமாறு சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். இதை தொடர்ந்து சபை காவலர்கள் தே.மு.தி.க. உறுப்பினர்களை வெளியேற்றினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்