முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றத்தில் தேரோட்டம்: பக்தர்கள் கோஷம்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், ஏப். 10  - பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை எட்ட முருகப் பெருமானின் முதல் படை வீடான திருப்பரங்குன்றத்தில் நேற்று தேரோட்டம் நடந்தது. திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 27 ம் தேதி கொடியேற்றப்பட்டு விழா துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான முருகப் பெருமான், தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடைபெற்றது. நேற்று தேரோட்டம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு நேற்று அதிகாலை உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் முடித்து சர்வ அலங்காரமாகி முருகப் பெருமானுக்கு சிவப்பு நிற பரிவட்டமும், தெய்வானை அம்மனுக்கு நீல நிற பரிவட்டமும் கட்டப்பட்டு கோயில் முன்புள்ள பெரிய வைரத் தேரில் எழுந்தருளினர். அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள கருப்பணசுவாமிக்கு பூஜைகள், தீபாராதனைகள் முடிந்து தேர்ச்சக்கரங்களுக்கு பூஜைகள் நடந்தது. தேரில் உள்ள மரக்குதிரைகள் மீது சிவாச்சாரியார் சுவாமிநாதன், வெள்ளைத் துண்டு வீசியவுடன் கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து காலை 6.24 மணிக்கு தேர் புறப்பாடானது. கிரிவல ரோட்டில் தேர் நகர்ந்து சென்று கோயிலின் முன்பு நிலை நிறுத்தப்பட்டது. அதன் பின்னர் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமி தரிசனம் நடைபெற்றது. தேர் இழுத்த கிராம முக்கியஸ்தர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. இரவு தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான தீர்த்தவாரி இன்று காலை நடக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்