முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் வெளியேற்றம்

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

மாமல்லபுரம், ஏப்.12 - சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதை அடுத்து மாமல்லபுரம் கடற்கரையில் இருந்து சுற்றுலா பயணிகள் மாவட்ட எஸ்.பி.மேற்பார்வையில் அவசர. அவசரமாக வெளியேற்றப்பட்டனர். நேற்று சென்னை மற்றும் தமிழகத்தின் பல பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. தமிழகத்தின் கடற்கரை பகுதிகளில் சுனாமி தாக்கும் அபாயம் உள்ளதால், மாமல்லபுரத்தில் நேற்று அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டது. அதன் படி காஞ்சிபிரம் மாவட்ட எஸ்.பி.மனோகரன், மாமல்லபுரம் பேரூராட்சி தலைவர் எம்.கோதண்டபாணி, தொல்பொருள்துறை அதிகாரி வாசுதேவன் ஆகியோர் முன்னிலையில் மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ஒலிபெருக்கி மூலம் கடற்கரை கோயில் அருகில் சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்து சுற்றுலா பயணிகளை அவசர, அவசரமாக வெளியேற்றினர்.

இதனால் பயணிகள் அனைவரும் அலரியடித்து கொண்டு ஒட்டம் பிடித்தனர். மேலும் கடற்கரையில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. 

இதனால் மாமல்லபுரம் கடற்கரை கோயில், கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. நேற்று மாலை 2 மணியில் இருந்து மாலை 6 மணி வரை கடற்கரை கோயிலை கண்டுகளிக்கும் நுழைவு கட்டணம் வழங்கும் பணி நிறுத்தப்பட்டது. பின்னர் உடனடியாக தொல் பொருள்துறை நிர்வாகம் கடற்கரை கோயிலின் நுழைவு வாயிலை தற்காலிகமாக மூட உத்தரவிட்டது. இதனால் மாமல்லபுரம் கடற்கரை பகுதி நேற்று மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் சுனாமி எச்சரிக்கையால் மாமல்லபுரத்திற்கு நேற்று மாலை 2 மணி முதல் வந்த அனைத்து தனியார் சுற்றுலா வாகனங்களும் நகருக்குள் அனுமதிக்கப்படாமல் திருப்பி விடப்பட்டன.

மற்றும் தனியார் கடற்கரை நட்சத்திர ஒட்டல்களில் தங்கியிருந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டனர். 

மேலும் நேற்று மாலை 3 மணி அளவில் கடற்கரைக்கு கோடை சுற்றுலா வந்திருந்த தனியார் பள்ளியை சேர்ந்த 100 குழந்தைகளை மாவட்ட எஸ்.பி.மனோகரன், பேரூராட்சி தலைவவ் எம்.கோதண்பாணி ஆகியோர் கடற்கரையை விட்டு பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினவ். பின்னர் உடனடியாக பள்ளி நிர்வாகம் அக்குழந்தைகளை அங்கிருந்து அழைத்து சென்றது. மேலும் சுனாமி எச்சரிக்கை தொடர்ந்து கிழக்கு கடற்கரை சாலை பகுதி மீனவர்களும் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்