முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூருக்கு எதிராக சென்னை கிங்ஸ் முத்திரை பதிக்குமா?

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப். 12 - 5 - வது ஐ.பி.எல். 20 -க்கு 20 போட்டியில் சென்னையில் இன்று நடக்க இருக்கும் லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோத உள்ளன. கேப்டன் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐ.பி.எல். போட்டியில் நடப்பு சாம்பியன் அணியாகும். ஆனால் இந்த சீசனில் அந்த அணி மோசமாக ஆடி வருகிறது. தற்போது நடந்த வரும் லீக்கில் சென்னை அணி மூன்றில் பங்கேற்று ஒரு வெற்றியும், இரண்டு தோல்வியும் பெற்றுள்ளது. எனவே இன்றைய போட்டியில் வெற்றி பெறுவது அந்த அணிக்கு கட்டாயமாகி உள்ளது. 

சென்னை அணி போன்று டெல்லியும் வெற்றிக்காக தடுமாறி வந்தது. ஜெயவதனே மற்றும் கெவின் பீட்டர்சன் இருவரும் அணியில் கடந்த சில நாட்களுக்கு முன் இணைந்தனர். அதன் பின்பு டெல்லி அணி சென்னை அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. சென்னை அணி இனிமேல் நடக்க இருக்கும் லீக் ஆட்டத்திலாவது தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். அது தான் நடப்பு சாம்பியனுக்கு நல்லது. 3-வது முறையாக பட்டத்திற்கு குறி வைத்துள்ள சென்னை அணி தனது முதல் லீக் ஆட்டத்திலேயே மும்பை அணியிடம் தோற்றது. 3-வது லீக்கில் டெல்

லியிடம் சரண்டர் ஆனது. 2-வது ஆட்டத்தில் டெக்கானை வென்றது. கேப்டன் டேனியல் வெட்டோரி தலை

மையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி தனது முதல் லீக்கில் டெல்லி டேர்டெவில்சை வென்றது. பின்பு 2 -வது லீக்

கில் கொல்கத்தா அணியிடம் தோற்றது. 

சாம்பியன் அணியான சென்னையின் பேட்டிங் வரிசை வலுவானது. இந்த அணியில் முரளி விஜய், டு பிளீசஸ், சுரேஷ் ரெய்னா, ஜடேஜா மற்றும் கேப்டன் தோனி ஆகியோர் உள்ளனர். ஆனால் இந்த அணியின் பேட்டிங் இதுவரை மோசமாகவே உள்ளது. 

டெல்லி மற்றும் மும்பை அணிகளுக்கு எதிரான லீக்கில் சென்னை அணி தட்டுத் தடுமாறி 100 ரன்னைக் கடந்தது. இதில் இரண்டிலும் 8 விக்கெட் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தது.இன்று நடக்க இருக்கும் போட்டி சென்

னையில் நடைபெறுவது சூப்பர் கிங்ஸ் அணிக்கு உதவியாகும். அந்த அணி தற்போது நெருக்கடியில் உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆவலைத் தீர்க்க வேண்டிய நிலையில் உள்ளது. டெல்லி அணிக்கு எதிரான லீக்கில் சென்னை அணி 110 ரன்னை எடுத்தது. ஐ.பி.எல். ஐப் பொறுத்தவரை இது அந்த அணியின் குறைந்த ஸ்கோர்களில் ஒன்றாகும். இந்தப் போட்டியில் சென்னை அணி வீரர்கள் 4 பேர் ரன் அவுட்டானார்கள். கேப்டன் தோனியின் பேட்டிங் பார்மு

ம் நன்றாக இல்லை. இந்த சீசனில் இதுவரை தனது அணி சரியாக ஆட வில்லை என்பதை கேப்டன் தோனியே ஒப்புக் கொண்டு இருக்கிறார். எனவே இன்றைய ஆட்டத்தில் விஜய், ரெய்னா, தோனி ஆகியோரது பேட்டிங்கைப் பொறுத்தே வெற்றி உள்ளது. ஜடேஜா டெக்கான் அணிக்கு எதிரான லீக்கில் தனது ஆல்ரவுண்டிங் திறமையை நிரூபித்தார். அவர் மின்னல் வேகத்தில் ஆடி 48 ரன் னை எடுத்தார். தவிர, 16 ரன்னைக் கொடுத்து 5 விக்கெட் எடுத்தார். இந்த சீசனுக்கான ஐ.பி.எல். போட்டியில் அதிக விலைக்கு எடுக்கப்பட்ட ஜடேஜா மீண்டும் முத்திரை பதிக்க வேண்டும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago