முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலைவர்கள் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஏப்.13 -​தமிழ்ப் புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வாழ்த்து: சித்திரை முதல் நாளாம் இந்த தமிழ்ப்புத்தாண்டில் உலகமெல்லாம் உள்ள தமிழ் மக்கள் விழாவாக கொண்டாடுகின்றனர். இந்த விழாவில் அனைத்து நலன்களும் தமிழ் மக்களுக்கு கிடைத்திடவும், இலங்கை வாழ்த்தமிழர்களுக்கு இன்னல் தீர்ந்து வருங்காலம் இனிதாக அமைந்திடவும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

விலைவாசி உயர்ந்து வரும் இந்த நாளில் புத்தாண்டு விழாவை கொண்டாடுவதற்கு ஆசை இருந்தாலும், ஏழைகளுக்கு கொண்டாடும் நிலைமை இல்லை. இருந்தாலும் விடுமுறை கிடைத்ததாலும், ஓய்வு கிடைத்ததாலும் நிம்மதிதானே. அந்த வகையிலாவது எல்லா மக்களும் இந்த தமிழ்ப்புத்தாண்டை இனிதே கொண்டாட வாழ்த்துகிறேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வாழ்த்து:​ தமிழ் புத்தாண்டு தை திங்கள் முதல் நாள்தான் என்பதற்கு எத்தனையோ வரலாற்று சான்றுகள் உள்ளன. அதே நேரத்தில் சித்திரை திருநாளுக்கும் தனிச்சிறப்பு உண்டு.

சித்திரை முழுநிலவு நாளில்தான் இந்திர விழா, வசந்த விழா என எண்ணற்ற விழாக்களை தமிழர்கள் கொண்டாடுவார்கள். தமிழக மக்களை சூழ்ந்திருக்கும் தீமைகள் அகன்று, உழவர்கள் வாழ்விலும், உழைக்கும் தமிழர்கள் வாழ்விலும் புத்துணர்வும், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்காக அயராது உழைப்போம் என்று இந்த சித்திரை திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்.

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர். சரத்குமார் வாழ்த்து:​ மீண்டும் சித்திரை முதல் நாளை, தமிழ்ப்புத்தாண்டு தினமாக இந்த ஆண்டு முதல் அறிவித்த தமிழக முதல்​ அமைச்சருக்கு தமிழக மக்கள் சார்பில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.தமிழ்ப்புத்தாண்டு தினத்தை உழவர் பெருவிழா நாளாகக் கொண்டாடி,16564 கிராமங்களில் விவசாயப் பெருமக்களுக்கு அறுசுவை உணவு வழங்கி பல்வேறு சலுகைகளையும் வழங்கி தமிழகத்தில் இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு வித்திட்டிருப்பதும் இன்றைய தமிழ்ப்புத்தாண்டில் தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் மகிழ்ச்சியும், பெருமையும் அளிப்பதாக உள்ளது.

தமிழகம், வேளாண்மைத்துறை மட்டுமல்லாது, கல்வி, தொழில், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் வியத்தகு வளர்ச்சி பெற்று, தமிழக மக்கள் மகிழ்வோடும், சிறப்போடும் வாழ் வாங்கு வாழ வேண்டும் என இவ்வினிய தமிழ்ப் புத்தாண்டு நன்னாளில் தமிழக மக்களுக்கு என் நல்வாழ்த்துக்களை என் சார்பிலும், சமத்துவ மக்கள் கட்சி சார்பிலும் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏறத்தாழ தமிழ் வருடப்பிறப்பாகவே தமிழ் மக்களின் மனதில் பல்லாண்டு  காலமாகப் பதிந்துவிட்ட இந்த சித்திரையில் பிறக்கும் நந்தன ஆண்டு நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் ஆண்டாக பவனி வருகிறது.

பஞ்சம், பிசி, பிணி, உள்நாட்டுக்கலகம், வன்முறை, நல்லநிர்வாகம், சாதி.இன மத பேதங்களில் இருந்து மக்களின் சிந்தனை  வெற்றியடையவும்,மூடநம்பிக்கைகளிலிருந்து  அறிவு வெற்றியடையவும் நாட்டு நலம் பேணும் நல்ல தலைவர்கள் கிடைத்து இந்தியா வெற்றியடைய வேண்டும். நல்லரசு அமைந்து விரைவில் வல்லரசாக இந்தியா வெற்றியடைய வேண்டும் நந்தன வருடம் என்றால் நல்லதங்காள்  கதை ஞாபகம் வருகிறது இறைவன் அருளால் இந்த நந்தன வருடம் நன்மை பயக்கும் வருடமாக அமையட்டும். புதிய nullநீதிக்கட்சி தலைவர் ஏ.சி. சண்முகம் வாழ்த்து:​

தமிழக அரசு தமிழ் மொழிக்கு தொண்டாற்றிய தமிழறிஞர்களுக்கு பல்வேறு சிறப்பு விருதுகளை அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று முதல்வர் ஜெயலலிதா அந்த விருதுகளை அறிஞர் பெருமக்களுக்கு வழங்குகிறார். இத்தகவல் தமிழர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியதாகும்.புத்தாண்டு, இலங்கை தமிழர்களின் வாழ்வில் இன்னல்களை நிரந்தரமாய் தீர்த்து, அவர்கள் வாழ்வில் நம்மதியும், குறைவிலா இன்பமும் கிடைத்திட வாழ்த்துகின்றேன்.

இவ்வாறு ஈடுயினையற்ற திருநாளான தமிழ்த்திருநாளாம் தமிழ்ப் புத்தாண்டு தின நல்வாழ்த்துக்களை உலககெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு, புதிய nullநீதிக்கட்சியின் சார்பில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago