முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புட்டபர்த்தி ஆசிரமத்தில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை

சனிக்கிழமை, 14 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

நகரி, ஏப் . - 14 - புட்டபர்த்தி சாய்பாபா கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ம் தேதி மரணம் அடைந்தார். அவரது ஓராண்டு நினைவு தினம் ஆசிரமத்தில் வருகிற 24 ம் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது. இதையொட்டி 22 ம் தேதி முதல் 26 ம் தேதி வரை ஆசிரமத்தில் ஆராதனை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  பிரசாந்தி நிலையத்தில் உள்ள குல்வந்த் அரங்கில் சாய்பாபா சமாதி உள்ளது. மலர்களால் சமாதி அலங்கரிக்கப்படவுள்ளது. நினைவு தினத்தை முன்னிட்டு சமாதி உள்ள இடத்தில் சாய்பாபா சிலை பிரதிஷ்டை செய்யப்படுகிறது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடக்கிறது. ஆராதனை நிகழ்ச்சியில் மட்டும் 2 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு விருந்தினராக கவர்னர் நரசிம்மன் கலந்து கொள்கிறார். சாய்பாபா முதலாமாண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அனந்தபுரம் மாவட்டம் உட்பட மாநிலத்தில் உள்ள 98 கிராமங்களுக்கு ரூ. 80 கோடி செலவில் குடிநீர் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் சாய்பாபா விட்டு சென்ற பணிகள் அனைத்தும் தொடரும் என்று ஆசிரம அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அனந்தராமன் தெரிவித்தார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்