முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சேப்பாக்கத்தில் விறுவிறுப்பான டிக்கெட் விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      விளையாட்டு
Image Unavailable

 

சென்னை, ஏப்.15 - ஐ.பி.எல். போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 10 ஆட்டம் நடக்கிறது. 8 லீக் ஆட்டம், குவாலிபையர் மற்றும் இறுதிப்போட்டி ஆகியவை நடக்கிறது.கடந்த 4​ந்தேதி நடந்த தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 விக்கெட்டில் தோற்றது. 12​ந்தேதி நடந்த 2​வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை வீழ்த்தியது.

சேப்பாக்கம் மைதானத்தில் 3​வது ஆட்டம் வருகிற 19​ந்தேதி நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புனே வாரியர்சை எதிர்கொள்கிறது. இரவு 8 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறும்.  இந்தப்போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. காலை 9 மணிக்கு விக்கெட் விற்பனை தொடங்கியது. குறைந்தபட்ச டிக்கெட்டான ரூ.700 விலையிலான டிக்கெட்டை வாங்க ரசிகர்கள் nullண்ட கியூவில் நின்றனர்.

டிக்கெட் விற்பனை மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ரூ.1,200, ரூ.3,000, ரூ.5,000, ரூ.7 ஆயிரம், ரூ.8 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வரையிலும் டிக்கெட்டுகள் விற்பனையானது. ஆன்லைன் மூலமும் டிக்கெட் விற்பனை நடைபெற்று வருகிறது.

சேப்பாக்கம் மைதானத்தில் 4​வது ஆட்டம் வருகிற 21​ந்தேதி (மாலை 4 மணி) நடக்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்சை சந்திக்கிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று (15​ந்தேதி) முதல் தொடங்குகிறது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்