முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் விஷூ திருவிழா: கோலாகல கொண்டாட்டம்

ஞாயிற்றுக்கிழமை, 15 ஏப்ரல் 2012      இந்தியா
Image Unavailable

 

திருவனந்தபுரம்,ஏப்.15 - கேரளாவில் விஷூ திருவிழா நேற்று கோலாலகலமாக கொண்டாடப்பட்டது. நேற்று அதிகாலையில் மக்கள் எழுந்து விஷூ கனியை பார்த்து மகிழ்ந்தனர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் மக்களின் கலாசார வழக்கப்படி தங்களுடைய புத்தாண்டை கொண்டாடி மகிழ்கிறார்கள். ஆந்திராவில் தெலுங்கர்கள் தங்களுடைய தெலுங்கு வருட பிறப்பை சிறப்பாக கொண்டாடுகிறார்கள். பஞ்சாப் மாநிலத்தில் சீக்கிய வருடமான வைஷாகி விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. அதே மாதிரி சித்திரை மாதம் 1-ம் தேதி தமிழ் வருடப்பிறப்பு கொண்டாடப்பட்டது. 

கேரளாவில் சித்திரை 2-ம் தேதியான விஷு திருவிழாவை மக்கள் கொண்டாடினர். இது மலையாள வருடப்பிறப்பாகவும் கொண்டாடப்படுகிறது. விஷு திருவிழாவை மக்கள் வழக்கமாக சிறப்பாக கொண்டாடினர். விஷு கனியை பார்த்தனர். நேற்றுமுன்தினமே அவரவர் வசதிக்கேற்ப ஒவ்வொரு வீட்டிலும்  ஒரு தட்டில் கிருஷ்ணர் படத்தையோ அல்லது சிலையையோ வைத்து அதைச்சுற்றிலும் மாம்பழம், அண்ணாச்சி பழம், பலாப்பழம் மற்றும் பல பழ வகைகள், தங்கநாணயம், அரிசி, பருப்பு வகைகளை வைத்து காலையில் எழுந்து அதை பார்த்தவாரே விழித்தனர். இதற்கு விஷு கனியை பார்த்தல் என்று அர்த்தம். அவ்வாறு பார்த்தால் அந்த வருடம் முழுவதும் எந்தவித சிரமும் இருக்காது. வருமானம் அதிகரிக்கும், நல்ல மழை பெய்யும் அனைத்து தரப்பு மக்களிடமும் ஒரு நல்லிணக்கம் ஏற்படும் என்பது மக்களின் நம்பிக்கையாகும். மேலும் நேற்று கேரள மக்கள் கோயில்களுக்கு சென்று வழிபட்டனர். குருவாயூர் கிருஷ்ணன் கோயில், சபரிமலை ஸ்ரீ அய்யப்பன் கோயில் மற்றும் முக்கிய கோயில்களில் மக்கள் ஏராளமானோர் சென்று வழிபட்டனர். வீடுகளில் பெரியோர்கள் தங்களுடைய மகன்கள், மகள்கள், பேரன் பேத்திகளுக்கு பணம் கொடுத்தனர். அப்படி கொடுத்தால் உறவினர்களுக்கு எப்போதும் பணத்தட்டுப்பாடு இருக்காது என்பது அவர்களின் நம்பிக்கையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்